Onetamil News Logo

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் இஞ்சி டீ குடித்து வாருங்கள். மழை குளிர் காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம்

Onetamil News
 

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் இஞ்சி டீ குடித்து வாருங்கள். மழை குளிர் காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம்


சென்னை 2019 அக்டோபர் 2 ;சைவ அசைவ உணவுகளின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் ஒரு உணவுப் பொருள் இஞ்சி. இது வெறும் சுவையை மட்டும் அதிகரிக்காது. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் கொட்டிக் கிடக்கிறது.
அதிகளவு விட்டமின் சி மக்னீசியம் மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி சாப்பிடும் போது உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தரும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால் முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் தன்மை கொண்டது.
அதிலும் குளிர்காலத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை காலை எழுந்தவுடன் குடித்தால் போதும் குளிர் காலத்தில் வரும் உடல் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். இங்கே இஞ்சி டீயை எப்படி தயாரிப்பது குளிர்காலத்தில் ஏற்படும் எந்தெந்த நோய்களை போக்கும் என்பது பற்றியும் தெளிவாக பார்ப்போம். மிக மிக பயனுள்ள இந்த பதிவை தவிர்க்காமல் இறுதிவரை பாருங்கள்.
முதலில் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள்
பொதுவாக மழை மற்றும் குளிர் காலங்களில் செரிமான சக்தி குறைவாக இருக்கும். இதனால் நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள். எனவே அனைவருமே காலையில் எழுந்ததும் ஒரு கப் இஞ்சி டீ குடித்தால் போதும் அன்றைய நாள் முழுவதும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் எதுவும் வராது. அதாவது இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்களால் செரிமானம் சீராக நடைபெற்று மலச்சிக்கல் உப்புசம் வயிற்றுவலி செரிமான பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
அடுத்ததாக சுவாச பிரச்சனைகள் பொதுவாக பருவகாலம் மாறும்போது சளி இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இவர்கள் காலை எழுந்தவுடன் ஒரு கப் இஞ்சி டீ குடித்து வந்தால் போதும் இந்த பிரச்சினையே இருக்காது. மேலும் சுவாசப் பாதையில் ஏதேனும் கிருமிகள் இருந்தால் அவை வெளியேறி சுவாச பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஆஸ்துமா உள்ளவர்கள் அவசியம் இஞ்சி டீ குடிப்பது நல்லது. அது மட்டுமல்ல தொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இந்த இஞ்சி டீ ஆகும்.
அடுத்த மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள்
குளிர்காலங்களில் தசைகள் இறுக்கம் அடைவதால் மூட்டு வலி அதிகம் பாடாய்படுத்தும் இதற்கு அருமையான மருந்து இந்த இஞ்சி டீ. எனவே மூட்டு வலி மற்றும் மூட்டுகளின் உள்ளே காயங்கள் இருப்பவர்கள் தினமும் காலையில் இஞ்சி டீ குடித்து வந்தால் அதில் உள்ள மருத்துவ குணங்களால் அனைத்து மூட்டுவலி பிரச்சனைகளும் நீங்கி விடும்.
அதேபோன்று பெண்களில் சிலர் மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியால் அவதிப்படுவார்கள். இவர்கள் இஞ்சி டீயை குடித்து வந்தால் வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்பு ஏற்படுவது குறையும்
முக்கியமாக இதில் விட்டமின் சி மக்னீசியம் க னிம சத்துகள் அமினோ அமிலங்கள் போன்றவை அதிகம் இருப்பதால் அவை இரத்தம் உறைவதை தடுத்து உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.
அதேபோன்று அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து கொலஸ்டிரால் அளவை குறைக்கும். மேலும் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் தன்மை உடையது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சினைகள் இருந்து தம்மை காத்துக்கொள்ள முடியும்.
முக்கியமாக மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது ஒரு கப் இஞ்சி டீ குடித்து பாருங்கள். இதனால் மன அழுத்தம் குறைந்து உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.
இப்பொழுது தயாரிக்க தேவையான பொருட்கள் பற்றி பார்ப்போம்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
எலுமிச்சை 1
பட்டை இரண்டு துண்டுகள்
புதினா இலைகள் கொஞ்சம்
தண்ணீர் தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு
இப்பொழுது தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்ததும் அதில் நசுக்கிய இஞ்சி பட்டை புதினா போன்றவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்கலாம். பொதுவாக இஞ்சியை பாலுடன் சேர்ந்து குடிப்பதை விட இது போன்று சாப்பிடுவது சிறந்த பலனை தரும். உண்மையில் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காபியை விட ஆயிரம் மடங்கு சிறந்தது. இந்த இஞ்சி டீ.
எனவே தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் இஞ்சி டீ குடித்து வாருங்கள். மழை குளிர் காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo