Onetamil News Logo

திமுக இளைஞரணி சார்பில் சட்டமாமேதை டாக்டர். அம்பேத்கர் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது 

Onetamil News
 

திமுக இளைஞரணி சார்பில் சட்டமாமேதை டாக்டர். அம்பேத்கர் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது 



தூத்துக்குடி டிசம்பர் 6 ; திமுக இளைஞரணி சார்பில் சட்டமாமேதை டாக்டர். அம்பேத்கர் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சட்டமாமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் 61வது நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது.
திமுகவின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி போல்பேட்டை பகுதி செயலாளர் பி.எஸ்.கே.மாரியப்பன் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்குமாவட்ட மீனவரணி அமைப்பாளர் எஸ்.ஆர்.ஜெ.ரமேஷ், மாவட்ட மீனவரணி துணைஅமைப்பாளர் துறைமுகம் புளோரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி தெற்குமாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், தூத்துக்குடி அண்ணா நகர் பகுதி செயலாளர் பென்னி ஆகியோர் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன்புள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆனந்தராஜ், போல்டன்புரம் செல்வம், மாவட்ட நிர்வாகி மகேந்திரன், பிரையண்ட் நகர் பகுதி பிரதிநிதி லியோஜான்சன், 6வது வார்டு செயலாளர் மணிவண்ணன், இளைஞரணி நிர்வாகிகள் கிருபாகரன், தனபால்ராஜ், கே.வி.மாரியப்பன், சிவக்குமார், திரேஸ்புரம் ரீகன், மம்மது, இளையவேந்தன் சேக்முகமது, முத்தரன், அந்தோணி, பால்துரை, வசந்த், முருகேசன், தளபதிமுருகன், விமல்ஜி, சிறுத்தைமுருகன், ஐகோர்ட்கிருஷ்ணன், கிறிஸ்டோபர், சிங்கம், கோரம்பள்ளம் அருண், பாஸ்கர், ராஜ்குமார், ஐய்யப்பன், ஹரிபாலமுருகன், ஜெயராஜ், தாஸ், மகளிரணி மலையரசி, பண்டாரம்பட்டி சுமி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo