Onetamil News Logo

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Onetamil News
 

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 


 தூத்துக்குடி டிசம்பர் 6 ; தூத்துக்குடியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு  கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. 
எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை கண்டித்தும், 25 வருட  துரோகத்திற்கு  நீதி கோரியும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என வலியுறுத்தியும் ராஜாஜி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.                                                                                                                                                                                                                     இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்  அஷ்ரப் அலி பைஜி தலைமை தாங்கினார்.மாவட்ட துணை தலைவர் முகம்மது அலி,மாவட்ட பொது செயலாளர் காயல்  மைதீன்,இம்மானுவேல்,மியாகான்,ஷேக் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப்  இந்தியா மாவட்ட தலைவர் பாசில் சமீர் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், அருட்பணியாளர் சுந்தரி மைந்தன், நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பார் புதுக்குடி ராஜா, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா பாசுல் சமீர், எஸ்டிஐ மாவட்ட பொருளாளர் மைதீன்கனி. மாநில பேச்சாளர் சாஹூல் ஹமீது கண்டன உரையாற்றினார். 
                                                                                                                                         இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட  பெண்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo