Onetamil News Logo

பாரதியார்  பிறந்த நாள் விழா ;  பாரதியார் வேடத்தில் இளம் மழலைகள் 

Onetamil News
 

பாரதியார்  பிறந்த நாள் விழா ;  பாரதியார் வேடத்தில் இளம் மழலைகள் 


                                                                                                                                தூத்துக்குடி டிசம்பர் 11 ;தூத்துக்குடி அமிர்தா வித்யாலயாவில்  இன்று பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளி முதல்வர் வித்யாசங்கர் திருவிளக்கு ஏற்றி   நிகழ்ச்சியைத் தொடங்கி வைததார். ஆசிரியை  வசந்தி  தொகுப்புரை ஆற்ற, ஆசிரியை மலர்விழி வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார்.                                                             
இதனைத்தொடர்ந்து தேசியக் கவிஞன் வரலாற்றைப் பற்றி இரண்டாம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யாவும், விடுதலைப்போராட்டத்தில் பாரதியின் பங்கு பற்றி இரண்டாம் வகுப்பு மாணவர் மூர்த்தியும் உரையாற்றினார். பாரதியாரின்  பாடலான 'எண்ணியமுடிதல் வேண்டும்" பாடலை இரண்டாம் வகுப்பு மாணவர் சின்காஸ் மஹாராஜன் பாடினார். பாரதி கண்ட புதுமைப் பெண்களை கண்முன்னேகொண்டு வந்தனர் முதலாம் வகுப்பு மாணவிகள் . தேசியக்கவிஞனின் பாடலுக்கு இரண்டாம் வகுப்பு மாணவிகள் நடனம் ஆடினர். எல்.கே.ஜி மாணவ மாணவிகள் பாரதியார் வேடமணிந்து கண்களை குளிர்வித்தனர். மாணவ மாணவிகள் 'பாரதியார் பாடல்கள்" ஒப்புவித்தல் போட்டியில் யு.கே.ஜி. , ஒன்றாம்  மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை  முத்துலெட்சுமி நன்றியுரைக் கூற சாந்தி மந்திராவுடன் விழா இனிதே  நிறைவடைந்தது.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo