Onetamil News Logo

நல்ல தமிழ் பேசிய தமிழர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவு       

Onetamil News
 

நல்ல தமிழ் பேசிய தமிழர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவு       


 நெல்லை கண்ணன் மறைவு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேசியுள்ள கவிஞர் வைரமுத்து, தமிழ் இலக்கியத்தில் முக்கியமான இடத்தில் இருந்தவர் நெல்லை கண்ணன். கம்பன், கண்ணதாசன், பாரதி என அனைவர் பற்றியும் அருவி போல உரையாற்றுவார். பாற்கடல் போல் தமிழில் பொங்குபவர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன். அவரது நகைச்சுவை அற்புதமானது. அவரது நகைச்சுவையை தவறாகச் சிலர் புரிந்துகொண்டதால் அவருக்கு நேர்ந்த விளைவுகளையும் நான் பார்த்திருக்கிறேன்.                                                                                                                 திருநெல்வேலியில் பிறந்த நெல்லை கண்ணனின் தந்தை ந.சு.சுப்பையா பிள்ளை, தாயார் முத்து இலக்குமி. இவருக்கு உடன்பிறந்தோர் எட்டு பேராவர். நெல்லை கண்ணனின் முதல் மகன் சுகா எனப்படும் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் புதியதலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார்.                                                            
     அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன். இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை சமீபத்தில் பெற்றிருந்தார். 77 வயது நிரம்பிய இவர் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்த நெல்லை கண்ணன் தனது வீட்டில் இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் பிரபல பேச்சாளராக விளங்கியவர் நெல்லை கண்ணன். இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். கம்பர் ராமாயணத்தைக் கரைத்து குடித்தவர். தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன்..                                                                                                                                       2019 இந்தியக் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக மேலப்பாளையத்தில், (திருநெல்வேலி) நடைபெற்ற மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இழிவாகப் பேசி, இசுலாமியர்களிடம் வன்மத்தை தூண்டியதாகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, திருநெல்வேலி காவல்துறையினர் 2020 சனவரி 1 அன்று இரவில் நெல்லை கண்ணனை பெரம்பலூரில் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், நெல்லை கண்ணனை சனவரி 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன்( 77) காலமானார். திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார்.

நெல்லை கண்ணன். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார்.

குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன். இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை சமீபத்தில் பெற்றிருந்தார்.

77 வயது நிரம்பிய இவர் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்த நெல்லை கண்ணன் தனது வீட்டில் இன்று உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் பிரபல பேச்சாளராக விளங்கியவர் நெல்லை கண்ணன். இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். கம்பர் ராமாயணத்தைக் கரைத்து குடித்தவர்.

தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன்.. காமராஜரின் தீவிர விசுவாசி.. காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு செயல்பட்டவர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo