Onetamil News Logo

துாத்துக்குடியில்  வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு; சி.எஸ்.ஐ  ஐயர் செல்வின் துரை சஸ்பெண்ட் 

Onetamil News
 

துாத்துக்குடியில்  வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு; சி.எஸ்.ஐ  ஐயர் செல்வின் துரை சஸ்பெண்ட் 



துாத்துக்குடி டிசம்பர் 29  :தூத்துக்குடியில்  சி.எஸ்.இ ஆலயமாக மிகவும் பிரபலமாக விளங்கி வரும்   சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தில் ஐயர் பணியில் இருப்பவர் செல்வின்துரை.இந்த ஆலயம்  தூத்துக்குடி  நாசேரத் திருமண்டலத்திற்குட்பட்டதாகும்.இந்த ஆலயத்திற்கு வரும் பல பெண்களிடம் ஆபாசமாக அழைத்துள்ளார்.ஆனால் தைரியமான பெண் மட்டும் சி.எஸ்.ஐ ஆலயத்தின் உயர் கமிட்டி நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்ததால் சி.எஸ்.ஐ ஐயர் செல்வின் துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.                                                                                                                                   
இது குறித்து மேலும் விசாரித்ததில்  ஐயர் செல்வின் துரை பெண்களிடம்  வாட்ஸ்நம்பர் வாங்கி சாட்டிங் செய்வது வழக்கமாகும்,ஆனால் அவரிடம் மாட்டும் பெண்கள் அப்பாவிகள் அதிகம் அவர்கள் வெளியில் சொல்வது கிடையாது என்பதனால் வலையை பல பேருக்கு வீசி உள்ளார்.அதில் மீன் மாட்டாமல்  துள்ளி விட்டது.என்று அங்குள்ள முக்கியஸ்தர் நம்மிடம் தெரிவித்தார்.
இந்த புகாரில் களம் இறங்கி விசாரணை செய்ததில்  திருமண்டல செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் ரவிசந்தர், துாத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு  ஆலயத்தின் உறுப்பினர் புல்கான்,ஆலயத்தின் நிர்வாக உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் எஸ்.இ .சி பேராயர் தேவசகாயத்திடம் வலியுறுத்தி  சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.                                                                                            
 இதன் அடிப்படையில் ஐயர் செல்வின் துரையிடம்  பேராயர் விசாரித்தார்.அதில் செல்வின்துரை பெண்ணிடம் வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொந்தரவு செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நிர்வாகிகள் கூட்டத்தில்  ஐயர்  செல்வின்  துரையை பணியிடை நீக்கம் செய்து பேராயர் உத்தரவிட்டார்.சண்முகபுரம் துாய பேதுரு ஆலய வளாகத்தில் உள்ள  வீட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டனர்.                                                                                                                        
ஐயர்  செல்வின்  துரை  பணி  செய்த  வடக்கூர் பேட்ரிக் சர்ச், டூவிபுரம் சர்ச்,போன்ற ஆலயங்களில் பல்வேறு பாலியல் புகாரில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
                                                                                                                                                                    
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo