Onetamil News Logo

கணவனின் கள்ளத்தொடர்பு ;  அசந்து தூங்கும் போது அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி 

Onetamil News
 

கணவனின் கள்ளத்தொடர்பு ;  அசந்து தூங்கும் போது அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி   


  மதுரை டிசம்பர் 5:  மதுரை நேரு நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன்.இவர் ஆட்டோ ஓட்டும் தொழிலாளி . இவரது மனைவி சசிகலா. இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மனைவியும் குழந்தைகளும் இருக்கும் போதே பரமேஸ்வரனுக்கு விரட்டிப்பத்து பகுதியில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கணவனின் கள்ளத்தொடர்பை அறிந்த சசிகலா கணவனிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் பரமேஸ்வரன் வீட்டுக்கு வருவதையே நிறுத்தி விட்டு விராட்டிபத்தில் தங்கிவிட்டார். விடாமல் தொடர்ந்த பரமேஸ்வரன் கணவனின் செயல் குறித்து சசிகலா எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பரமேஸ்வரனை அழைத்த போலீசார் அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும் பரமேஸ்வரன் கேட்கவில்லை தனது பழக்கத்தை தொடர்ந்தார்.                                                                                                                                                                           
 சசிகலா ஒரு திட்டம் வகுத்து கணவரை அன்பாக அழைத்து . இனி எதுவும் கேட்கமாட்டேன் என்றும் தன்னுடன் மதுரைக்கு வந்து வசிக்குமாறு அழைத்தார். அப்பொழுது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சசிகலா மனைவியின் மென்மையான பேச்சில் உருகிய பரமேஸ்வரன், நம்பி வீட்டிற்கு சென்றார். சந்தோசமாகவே போனது. சாப்பிட்டு விட்டு அசந்து தூங்கினார் பரமேஸ்வரன் நன்றாக தூங்கி கொண்டிருக்கும்போது , எண்ணெயை கொதிக்க வைத்து அவரது அந்தரங்க உறுப்பில் ஊற்றினார்.                                                         
                                                                                                                                                 வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார் பரமேஸ்வரன். அக்கம் பக்கத்தினர் உடனே மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பரமேஸ்வரனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக  போலீஸ் வழக்குப் பதிவு செய்து சசிகலாவை விசாரணை செய்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo