Onetamil News Logo

தூத்துக்குடி அருகே தென்திருப்பேரை செங்கல் தொழிற்சாலையில் 100டன் விறகு தீ வைத்து எரிப்பு - ஒருவர் கைது

Onetamil News
 

தூத்துக்குடி அருகே தென்திருப்பேரை செங்கல் தொழிற்சாலையில் 100டன் விறகு தீ வைத்து எரிப்பு - ஒருவர் கைது 


ஸ்ரீவைகுண்டம்: அக்டோபர் 12 ; தென்திருப்பேரை செங்கல் தொழிற்சாலையில் 100டன் விறகு தீ வைத்து எரிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்து  விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தென்திருப்பேரையில் தனியாருக்கு சொந்தமான செங்கல் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் நெருங்கி விட்டதால் பச்சை மண்ணில் உருவான செங்கல்களை சுட்டு எடுத்து பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக சுமார் 200டன் விறகு வாங்கி வரப்பட்டு தொழிற்சாலையின் உட்பகுதியில் மலைபோல குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 3மணியளவில் சேமித்து வைக்கப்பட்டிந்த விறகு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சுமார் 100 டன்னுக்கும் அதிகமான விறகுகள் எரிந்து சாம்பலானது.
இதுகுறித்து செங்கல் உற்பத்தி தொழிற்சாலையின் மேலாளர் ஜேசுதாஸ் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சப் & இன்ஸ்பெக்டர் பால்ஐசக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையின்போது மாவடிப்பண்ணையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மகன் தெய்வசுந்தரம்(வயது 45) தான் சேமித்து வைக்கப்பட்டிருந்த விறகினை தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.
                                                                                                                  இதனைத்தொடர்ந்து சப்இன்ஸ்பெக்டர் பால்ஐசக் தெய்வசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். முன்பகை காரணமாக ரூ.3லட்சம் மதிப்பிலான விறகு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo