Onetamil News Logo

தூத்துக்கடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1.61 லட்சம் நபர்கள்; பயன் பெற்றுள்ளனர்.

Onetamil News
 

தூத்துக்கடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1.61 லட்சம் நபர்கள்; பயன் பெற்றுள்ளனர்.   


தூத்துக்குடி 2019 ஜூன் 13 ;தூத்துக்கடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1.61 லட்சம் நபர்கள்; பயன் பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடந்த 10 ஆண்டுகளில் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 1.61 இலட்சம் நோயாளிகள் இந்த சேவையை பயன்படுத்தியுள்ளதாக 108 ஆம்புலன்சில் மாவட்ட மேலாளராக பணிபுரியும் திரு.ஜோன்ஸ் அவர்கள் தங்களது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் 108 சேவை கடந்த செப்டம்பர் மாதம் 2008ம் ஆண்டு முதல் துவக்கப்பட்டு தற்பொழுது மாநிலம் முழுவதும் 926  வாகனங்களுடன் மக்கள் அழைத்த 12 நிமிடத்திற்குள் நகர்ப்புறங்களிலும் 16 நிமிடத்தில் கிராமப்புறங்களுக்கும் சென்றடைகின்றது நமது தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 18 ஆம்புலன்சுகள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு மக்களுக்கு துரித சேவை அளித்து வருகிறது அதில் 2 பச்சிளம் குழந்தைகளுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இன்குபேட்டர் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் உள்ளது. மற்றும் மற்ற தனியார் வாகனங்களில் ஆக்சன் வசதியை தவிர வேறு எந்த ஒரு வசதியும் இல்லாத நிலையில் நமது 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ளேயே முதல் உதவி செய்வதற்கு வசதியாக அவசர கால மருத்துவ உதவியாளர் உடன் வென்டிலேட்டர் இசிஜி மல்டி பாரா மானிட்டர் மற்றும் அவசர காலங்களில் உயிர் காக்கக் கூடிய 50க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள் இருப்பதால் நோயாளி சம்பவ இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அபாய கட்டத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறார் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும்  கடந்த 10 ஆண்டுகளில் 108 சேவை துவங்கியது முதல் தற்போது வரை 1.61லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்துள்ளார்கள் இதில் சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேல் நபர்களை முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள் மேலும் பிரசவத்திற்காக கர்ப்பிணி தாய்மார்கள் சுமார் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளார்கள் பொதுமக்கள் அழைக்கும் இடம் எளிதில் கண்டறிவதற்கு வசதியாக 108 அவசரம் என்ற மொபைல் ஆப் வசதி கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து 108 சேவை மையத்தை அழைக்கும் பொழுது இன்னும் விரைவில் எங்களால் அலைபவர்கள் இடத்தினை சென்றடைய முடியும் என்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்

 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo