Onetamil News Logo

புற்றுநோயில் இருந்து காப்பாற்ற 13 வயது சிறுமி தந்தையிடம் கெஞ்சல் ; சாய் ஸ்ரீ  மரணம்

Onetamil News
 

புற்றுநோயில் இருந்து காப்பாற்ற 13 வயது சிறுமி தந்தையிடம் கெஞ்சல் ; சாய் ஸ்ரீ  மரணம்  


விஜயவாடா : 
ஆந்திராவில்  விஜயவாடா பகுதியை சார்ந்தவர்  மாதம்ஷெட்டி சிவகுமார் இவரது  13 வயது மகள் சாய் ஸ்ரீ இவர்  எலும்பு மஞ்சை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.சாய் ஸ்ரீ தந்தை கடந்த  8 ஆண்டுகளுக்கு முன்பே சாய் ஸ்ரீயையும அவரது தாயாரையும் விட்டு மாதம் ஷெட்டி சிவகுமார்  விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால்  சாய் ஸ்ரீ தந்தை பெங்களூரில் வசிக்க சிறுமி சாய் ஸ்ரீ அவரது தாயார் விஜயவாடாவில் வசித்து வந்துள்ளார். சாய் ஸ்ரீ க்கு  எலும்பு மஞ்சை புற்றுநோய் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக சாய்ஸ்ரீ பெயரில் உள்ள வீட்டை விற்று ரூ. 40 லட்சம் பணம் பெற அவரின் தாயார் முடிவு செய்துள்ளார். ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போட்ட மாதம்ஷெட்டி சிவகுமார் வீட்டை விற்கமுடியாமல் தடையை ஏற்படுத்தி உள்ளார். இதனால் சாய் ஸ்ரீ தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ பதிவை  வெளியிட்டிருந்தார்.
அதில் ' அப்பா நான் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறேன், அம்மா என்னுடைய சிகிச்சைக்காகத் தான் வீட்டை விற்கிறார். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்களே பணத்தை செலுத்து எனது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒரு வேளை நீங்கள் அப்படி செய்யாவிடில் எனது உயிரிழப்புக்கு நீங்கள் தான் காரணம்' என்று கண்ணீர்விட்டு கதறி அழுதபடியே இருக்கும் அந்தப் பிஞ்சின் கதறல் வீடியோ.
ஆனால் சிறுமியின் வீடியோவிற்கும் மனமிரங்காத கல் நெஞ்சக்கார்ராக அவரது தந்தை இருந்ததால்  இரண்டு தினங்களுக்கு முன்னர் சாய் ஸ்ரீசாய் ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்ததையடுத்து தந்தையிடம் அவர் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி விஜயவாடா காவல்துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo