Onetamil News Logo

இந்தியாவின் 13 -வது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைந்தார் ;வாழ்க்கை வரலாறு   

Onetamil News
 

இந்தியாவின் 13 -வது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைந்தார் ;வாழ்க்கை வரலாறு   


டெல்லி 2020 ஆகஸ்ட் 31 ;டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84) காலமானார்.                                                                                       
           கடந்த 10-ம் தேதி டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், இன்று மாலை அவர் காலமானார். 

 கடந்த 2012 முதல் 2017 வரை ஜனாதிபதி பதவி வகித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய பிரணாப் முகர்ஜி, கடந்த 1982- 84, 2009-12, ஆண்டுகளில் நிதி அமைச்சராகவும், 2004- 06 வரை பாதுகாப்பு அமைச்சராகவும், 1995-96,2006-09 ஆண்டுகளில் வெளியுறவு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 1980 முதல் 1985 ராஜ்யசபா தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 
                       பிரணாப் முகர்ஜி என்ற பெயர் தான் பிரணப் குமார் முகர்ஜி இவர்  11 டிசம்பர் 1935 அன்று பிறந்தார். அவர் இன்று  31 ஆகஸ்ட் 2020 மறைந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்ட அரசியல்வாதி. இந்தியாவின் 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணாப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.முன்னதாக கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
1969ம் ஆண்டு இந்திரா காந்தியால் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளிலும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டு 14வது மக்களவைக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள ஜங்கிப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், 2009ம் ஆண்டு 15வது மக்களவைக்கு ஜங்கிப்பூரிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982 - 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி நடத்தினார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின் மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.
இவரது நூல்கள்:
பியான்ட் சர்வைவல்: எமெர்ஜிங் டைமன்சன்ஸ் ஆப் இந்தியன் எக்கனமி-1984.
ஆஃப் தி டிராக் - 1987.
சாகா ஆப் ஸ்ட்ரக்குள் அண்ட் சேக்ரிபைஸ் - 1992.
சேலஞ்சஸ் பிஃபோர் தி நேசன் - 1992.
தாட் அண்ட் ரிப்லெக்சன்ஸ் - 2014.
தி டிராமடிக் டிகேட்: தி இந்திரா காந்தி இயர்ஸ் - 2014.
மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. இவரின் தந்தை 1952-64 வரை மேற்கு வங்காளம் மாநில சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார் . இவர் 1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர்.அபிஜித், மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சியின் ஜஙிபுர் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார், மகள் கதக் நடன கலைஞராக உள்ளார்.
அவருக்கு அபிஜித், இந்திரஜித் என்ற இரண்டு மகன்களும், சர்மிஸ்தா என்ற மகளும் உள்ளனர். மனைவி, சுவ்ரா முகர்ஜி கடந்த 2015 ல் காலமாகிவிட்டார் பிரணாப் முகர்ஜி, பாரத ரத்னா, பத்ம விபூஷண் விருதுகளை பெற்றுள்ளார். இது தொடர்பாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவு: டாக்டர்களின் கடுமையான முயற்சி, இந்திய மக்களின் பிரார்த்தனைக்கு பிறகும், எனது தந்தை பிரணாப் முகர்ஜி காலமாகிவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo