Onetamil News Logo

பெரியார் 144வது பிறந்தநாள் –  தூத்துக்குடியில் அமைச்சர், மேயர் பங்கேற்று உறுதிமொழி ஏற்பு   

Onetamil News
 

பெரியார் 144வது பிறந்தநாள் –  தூத்துக்குடியில் அமைச்சர், மேயர் பங்கேற்று உறுதிமொழி ஏற்பு   


தூத்துக்குடி பெரியார் 144வது பிறந்தநாளை யொட்டி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் அடையாளமாக சமூக நீதி நாளை கொண்டாடுவோம்” என்று பெரியாருக்கு புகழாரம் சூட்டினார்.
        இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டுமென்றால் 10 நாட்கள் அவையை ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும். யாரும் எழுத தயங்கியதை எழுதியவர், யாரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார். தனது 18 ஆவது வயது முதல் இறுதி மூச்சு வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். தீண்டாமை மற்றும் ஜாதி கொடுமையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர். ஒடுக்கப்பட்ட மக்களளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இவரது பங்கு அளப்பறியது. ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் இந்த பகுத்தறிவு பகலவன்.ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய எழுச்சிக்கு பெரியார் போட்ட விதைதான் காரணம்.ஜாதிய பாகுபாடுகளை களைய தன் இறுதி மூச்சு வரை போராடியவர்.பகுத்தறிவு பகலவன் என அழைக்கப்படும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் ஏற்றத்தாழ்வுகள், பெண் அடிமை, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண் கல்வி உள்ளிட்டவைகளுக்காக பாடுபட்டவர்.   சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதியான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.  முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து இன்று தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வணக்கத்துக்குரிய மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சமூக நீதி போராளிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சமூக நீதி நாளான இன்று அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.தூத்துக்குடி பெரியார் பிறந்தநாளை யொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர்.  
     
 நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாவட்ட அணி அமைப்பாளர்கள்; மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், கஸ்தூரி தங்கம், உமாதேவி, பரமசிவம், ஜெபசிங், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா,  மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி,  மாநகர துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், பால்மாரி, ஆர்தர்மச்சாது, கிறிஸ்டோபர் விஜயராஜ், டைகர் வினோத், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், சக்திவேல், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மண்டலத்தலைவர் முருகன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜான்சிராணி,  தெய்வேந்திரன், இசக்கிராஜா, கந்தசாமி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரவி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், செந்தில்குமார், பகுதி மகளிர் அணி அமைப்பாளர் ரேவதி, முன்னாள் ஊராட்;சி மன்ற தலைவர் பார்வதி, வட்டசெயலாளர்கள் கங்காராஜேஷ், சதீஷ்குமார், சுப்பையா, அனல் சக்திவேல்,  கதிரேசன், கீதாசெல்வமாரியப்பன்,  வன்னியராஜ், பாலு, பொன்ராஜ், டென்சிங், பொன்னுசாமி, சிங்கராஜ், செல்வராஜ், செந்தில்குமார், நிர்வாகிகள் கருனா, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, ஜோஸ்பர், மகேஸ்வரசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிட கழகம் சார்பில் மாவட்ட தலைவர் பால்ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் முனியசாமி, ஆகியோர் மாலை அணிவித்தனர். தமிழக அரசு சமூகநீதி நாளாக கடைபிடிக்க வேண்டும் என அறிவித்திருந்ததையடுத்து அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தலைமையில் சமூகநீதி குறித்த உறுதிமொழியை பெரியார் சிலை முன்பு எடுத்துக் கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo