Onetamil News Logo

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 19 பேர் கைது - 188 மதுபாட்டில்கள்  பறிமுதல் 

Onetamil News
 

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 19 பேர் கைது - 188 மதுபாட்டில்கள்  பறிமுதல் 


தூத்துக்குடி 2021 ஜூலை 25 ;தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 19 பேர் கைது - 188 மதுபாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று (24.07.2021) தூத்துக்குடி வடபாகம், தாளமுத்து நகர், புதுக்கோட்டை, முறப்பநாடு, சிப்காட், திருச்செந்தூர், பசுவந்தனை, கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு, கயத்தார், எட்டயபுரம், குளத்தூர்,   தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 14 காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 19 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 188 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo