Onetamil News Logo

தூத்துக்குடி அருகே நடந்த கோரவிபத்தில் 2 பேர் பலி ;12 பேர் படுகாயம்

Onetamil News
 

தூத்துக்குடி அருகே நடந்த கோரவிபத்தில் 2 பேர் பலி ;12 பேர் படுகாயம்


                                                                                   தூத்துக்குடி டிசம்பர் 7; தூத்துக்குடி டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று காலையில் விபத்தில் சிக்கிய வேன் ;                                                     சேலம் மாவட்டம், ஓமனூர் அருகே உள்ள பஞ்சிகாலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் ஒரு வேனில் திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருந்தனர்.                                                                                                                                    அதே கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சரவணன்  என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார்.                                                                                                                                                                                        நேற்றிரவு 10 மணியளவில் வேன் புறப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணியளவில், தூத்துக்குடி - எட்டயபுரம் ரோடு, கீழஅரசரடி டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
                                                                                                                                  இதில், வேனின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கி, ரகுநாதன் மகன் நவீன்(23),உப்புலி மனைவி லெட்சுமி (50) என்பவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்தில், படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 7 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 13பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து புதியம்புத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo