இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடியவர் உட்பட 2 பேர் கைது - 21 மூடை ஆற்று மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடியவர் உட்பட 2 பேர் கைது - 21 மூடை ஆற்று மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்.செய்யப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் நேற்று (24.05.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகை பகுதியில் ஸ்ரீவைகுண்டம் சந்ததையடி தெருவை சேர்ந்த சுப்பையா மகன் இசக்கிராஜா (எ) ராசாக்கிளி (27) என்பவர் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் 11 மூடை ஆற்று மணலையும், அதேபோன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர் ரேணுகா மற்றும் போலீசார் நேற்று ரோந்துபணியில் ஈடுபட்டபோது ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சி பகுதி அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த இசக்கி மகன் கண்ணன் (எ) கருப்பசாமி (27) என்பவர் 10 மூடை ஆற்று மணலையும் திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக மேற்படி போலீசார் எதிரிகளான இசக்கிராஜா (எ) ராசாக்கிளி மற்றும் கண்ணன் (எ) கருப்பசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 21 மூடை ஆற்று மணல் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட இசக்கிராஜா (எ) ராசாக்கிளி மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், கண்ணன் (எ) கருப்பசாமி மீது கொலை முயற்சி உட்பட 10 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.