+2 பொதுதேர்வில் பார்வையற்ற மாணவி .N.நவீனா 600/518 மதிப்பெண் பெற்று வெற்றி,அதேபோல் மாணவர் M. முத்துமாரியப்பன் 600/467 மதிப்பெண் பெற்று வெற்றி, பாராட்டுவிழா
+2 பொதுதேர்வில் பார்வையற்ற மாணவி .N.நவீனா 600/518 மதிப்பெண் பெற்று வெற்றி,அதேபோல் மாணவர் M. முத்துமாரியப்பன் 600/467 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதால் பாராட்டுவிழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் பார்வையற்றோர் மாணவர்கள் +2 பொதுதேர்வில் மாணவி செல்வி.N.நவீனா 600/518 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். அதேபோல் மாணவர் M. முத்துமாரியப்பன் 600/467 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். இவர்கள் இருவரையும் பாராட்டி அவர்களுடைய கல்வி மேற்படிப்புக்காக தூத்துக்குடி மாஸ் சேரிடபுள் டிரஸ்ட் நிறுவனர் சமூக ஆர்வலர் S.தமிழ்ச்செல்வன் (மாஸ் ஆம்புலன்ஸ் சர்வீஸ் ), Infant Transport உரிமையாளர் Y.அந்தோணி அவர்களும் சேர்ந்து பார்வையற்றோர் இரண்டு மாணவர்களுக்கும் சேர்த்து தலா ரூ.10,000/- வீதம் இரண்டு நபர்களுக்கும் சேர்த்து ரூ.20,000/- காசோலையை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து தொழிலதிபர் தனசேகரன் இரண்டு பார்வையற்றோர் மாணவர்களையும் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக பரிசு பொருட்களை வழங்கினார்கள் மேலும் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக இரண்டு பார்வையற்ற மாணவர்களையும் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக பரிசு பொருட்களை வழங்கினார்கள்..
இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேக்கப் மனோகர் தலைமையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்.பாத்திமா பாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பாராட்டினார்கள். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இளைஞரணி செயலாளர் ராஜா அவர்களும், தமிழக பாரதி கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் மின்னல் அம்ஜத் அவர்களும் கலந்து கொண்டனர் மற்றும் பள்ளியின் ஆசிரிய பெருமக்களுக்கும் மற்றும் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் மு. மருதப்பெருமாள்.எம்.காம்., மாநில செயலாளர் பி.ஜெயராஜ், மாநில பொருளாளர் K.செல்வக்குமார் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்