விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 2பேருக்கு ஆயுள் தண்டனை
விளாத்திகுளம் 2023 செப் 15 ;கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவிபத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி மணல் கொள்ளையர்களால் அலுவலகத்திற்குள்ளையே வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ராமசுப்பு,மாரிமுத்து ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள விசாரணை அதிகாரியாக ரூரல் டிஎஸ்பி சுரேஸ் நியமனம் செய்யப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் முடித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் 31-சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 52-சான்று ஆவனம் மற்றும் சான்று பொருட்கள் ஆகியவை குறியீடு செயப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பானது இன்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும் 3-ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி செல்வம் தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.