இளம்பெண்ணை காதலன் முன்னே கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது ; பல திடுக்கிடும் தகவல்
இளம்பெண்ணை காதலன் முன்னே கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது ; பல திடுக்கிடும் தகவல்
தூத்துக்குடி 2023 செப் 12 ;தூத்துக்குடியில் இளம்பெண்ணை காதலன் முன்னே கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி கே வி கே நகரை சேர்ந்த தொழிலாளி மனைவி கணவரை பிரிந்து வசித்து வருகிறார். கடற்கரை சாலையில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தாளமுத்து நகரை சேர்ந்த ஷிப்பிங் நிறுவன ஊழியர் கணேசனுக்கும் (21) இடையே இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாத காலமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் அவ்வப்போது பல்வேறு இடங்களில் ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மத்திய பாதுகாப்பு அலுவலர் குடியிருப்பு அருகே தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் காதலனை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை பைக்கில் கடத்திச் சென்றதாக பீச் ரோட்டில் உள்ள ரயில்வே ட்ராக் அருகே அந்த பெண்ணை தூக்கிச் சென்று இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வாலிபர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் இதில் தொடர்புடைய கூலித் தொழிலாளி சிதம்பர நகரை சேர்ந்த வேல்முருகன் (30) அவரது கூட்டாளியான லயன்ஸ் ஸ்டோன் பகுதியைச் சேர்ந்த யோசேப்பு என்ற திருமணமான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.போலீஸ் விசாரணையில் யோசேப்புஇவர் வெளிநாட்டில் வேலை செய்த பொழுது அங்கே பல்வேறு நாட்டு பெண்களுடன் வாரம் தோறும் உல்லாசத்திற்கு சென்று விடுவாராம். அங்கு சென்று அவர்களுடன் சேர்ந்து இருந்த புகைப்படங்களை தூத்துக்குடியில் லயன்ஸ்டவுன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அனுப்பி உள்ளார். அதைப்போல தூத்துக்குடிக்கு வந்த பிறகும் இது போன்ற பல பெண்களுடன் சல்லாபம் கொண்டிருக்கிறார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து இருக்கிறார். என்ற தகவல் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. மேலும் பல்வேறு இளைஞர்களை தீய வழியில் அழைத்துச் சென்று குட்டிச்சுவர் ஆக்கிய கதைகளும் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.