குடி போதை பழக்கத்தினால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்,போதை பழக்கத்துக்கு ஆளானவருக்கு பெண் தராதீர்கள், குடியால் என் மகனை இழந்தேன் மத்திய அமைச்சர் உருக்கம் கவுசல் கிஷோர்
குடி போதை பழக்கத்தினால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்,போதை பழக்கத்துக்கு ஆளானவருக்கு பெண் தராதீர்கள், குடியால் என் மகனை இழந்தேன் மத்திய அமைச்சர் உருக்கம் கவுசல் கிஷோர்
குடிப்பழக்கத்தால் என் மகனை இழந்தேன் குடிகாரர்களுக்கு யாரும் தங்கள் மகள் சகோதரியை திருமணம் செய்து தர வேண்டாம் என மத்திய இணை அமைச்சர் கவுசல் கிஷோர் உருக்கத்துடன் குறிப்பிட்டார் உத்திர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது இங்குள்ளாம்புவா சட்டசபை தொகுதியில் போதை மீட்பு முகாம் நடந்தது இந்த தொகுதி அடங்கிய மோகன்லால் கன்ச் லோக்சபா தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்பியும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற இணை அமைச்சருமான கௌசல் கிஷோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் அப்போது அவர் பேசியதாவது குடிப்பழக்கம் ஒருவரது ஆயுளை குறைத்து விடுகிறது ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து 90 ஆண்டுகள் நடந்த போராட்டத்தில் 6.32 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆனால் போதை பழக்கத்தால் தற்போது ஆண்டுக்கு 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் குடி போதை பழக்கம் உள்ள அதிகாரியை விட ஒழுக்கமான கூலித் தொழிலாளி சிறந்தவர் உங்களுடைய மகள் அல்லது சகோதரியை போதை பழக்கத்துக்கு ஆளானவருக்கு திருமணம் செய்து தராதீர்கள் இது உறுதிமொழியாக எடுத்துக் கொள்ளுங்கள் என் மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார் அவரை போதை மீட்பு மையத்தில் சேர்த்தோம் திருந்தி வந்ததால் அவருக்கு ஆறு மாதங்களுக்கு உள்ளதாக திருமணம் செய்து வைத்தோம் ஆனால் மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க துவங்கினார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் குடிப்பழக்கத்தால் உயிர் இழந்தார் அப்போது அவரது குழந்தைக்கு இரண்டு வயது என் மகனின் குடிப்பழக்கத்தால் என் மருமகள் இளம் வயதில் விதவையாகிவிட்டார். நான் எம்பியாகவும் என் மனைவி எம்எல்ஏ ஆகவும் இருந்தோம், ஆனால் குடிப்பழக்கத்தில் இருந்து எங்கள் மகனை மீட்க முடியவில்லை. சாதாரண மக்கள் எப்படி மீட்பர். அதனால் குடி போதை பழக்கத்தை கைவிடுங்கள் இவ்வாறு அவர் பேசினார்.