Onetamil News Logo

2021 தேர்தல் விதிமுறைகள் ;தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடை­பெ­று­கிறது. 

Onetamil News
 

2021 தேர்தல் விதிமுறைகள் ;தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடை­பெ­று­கிறது. 


சென்னை 2021 பிப்ரவரி 27 ; தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் ஏப்ரல் 6ம் தேதியை இந்­திய தலைமை தேர்­தல் ஆணை­யர் சுனில் அரோரா நேற்று டெல்­லி­யில் அறி­வித்­தார்.
தமி­ழ­கத்­தின் 234 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­கும் ஒரே கட்­ட­மாக ஏப்­ரல் 6ஆம் தேதி நடை­பெ­று­கிறது. கேரள மாநி­லத்­தின் 140 தொகு­தி­க­ளுக்­கும் புதுச்­சேரி யூனி­யன் பிர­தே­சத்­தின் 30 தொகு­தி­க­ளுக்­கும் ஏப்­ரல் 6ஆம் தேதி தேர்­தல் நடைபெறும்.அசா­மின் 126 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­கும் மார்ச் 27, ஏப்­ரல் 2, ஏப்­ரல் 6 என மூன்று கட்­டங்­க­ளா­கத் தேர்­தல் நடை­பெ­றும்.மேற்கு வங்­கத்­தின் 294 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­கும் எட்டு கட்­டங்­க­ளா­கத் தேர்­தல் நடை­பெ­றும். மார்ச் 27, ஏப்­ரல் 1, ஏப்­ரல் 6, ஏப்­ரல் 10, ஏப்­ரல் 17, ஏப்­ரல் 22, ஏப்­ரல் 26, ஏப்­ரல் 29 ஆகிய தேதி­களில் அந்த மாநி­லத் தேர்­தல் நடை­பெ­றும். தேர்­தல் அறி­விக்­கப்­பட்டு உள்ள நான்கு மாநி­லங்­கள் மற்­றும் புதுச்­சேரி யூனி­யன் பிர­தே­சத்­தில் மே 2ஆம் தேதி வாக்­கு­கள் எண்­ணப்­பட்டு முடி­வு­கள் அறி­விக்­கப்­படும் என தலைமை தேர்­தல் ஆணை­யர் அறி­வித்­துள்­ளார்.தமிழகத்தில் எச்.வசந்த குமார் மரணத்தால் காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.                                    
                ஒரு தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டால், தேர்தலை நியாயமாகவும் அரசியல் சார்பு அற்றதாகவும் நடத்துவதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக உடனயடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மாநிலத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் தளர்ந்த பின் இந்த அலுவலகங்கள் திறக்கப்படும்.   
இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். தேர்தல் முடிந்த பின்னரே திறக்கப்படும்.இதேபோல ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பயன்படுத்திய அரசு வாகனங்கள், மாவட்ட ஊராட்சி தலைவரின் அரசு வாகனங்கள் உள்ளிட்டவற்றை அரசு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அரசியல் கட்சியினர் விளம்பர படுத்தும் வகையில் இருக்கும் முதல்வர், பிரதமர், அரசியல் கட்சியினரின் முக்கிய தலைவர்கள் உள்பட தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது காலெண்டர்கள் அரசு அலுவலங்களில் உடனடியாக அகற்றப்படும்.இதேபோல் 50000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வெளியில் எடுத்து சென்றால் அதற்கு உரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும். வாக்காளர்களை கவரும் நோக்கில் பணம் அல்லது பரிசு பொருட்கள் விநியோகிக்க கூடாது. இதை தடுக்கவே தேர்தல் ஆணையம் உரிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.இன்று முதல் அனைத்து நலத்திட்ட உதவிகள் தேர்தல் முடிந்து புதிய அரசு வரும் வரை நிறுத்தப்படும். ரேஷன் கார்டு விண்ணப்பம், முதியோர் உதவி தொகை விண்ணப்பம், விதவையர் விண்ணப்பம், சமுக நலத்திட்ட உதவிகள் கோருவது உள்பட அனைத்து பொதுசேவைகளும் தேர்தலுக்கு பின்னர் புதிய அரசு அமைந்த பின்னரே செயல்பாட்டிற்கு வரும்.சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்போது உள்ள அரசு காபந்து அரசாக மாறிவிடும். அரசால் எந்த அறிவிப்பும் புதிதாக வெளியிட முடியாது. ஏற்கனவே நிதி ஒதுக்கி செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு எந்த தடையும் இல்லை
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo