Onetamil News Logo

சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 22 பேர் கைது - 576 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் 

Onetamil News
 

சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 22 பேர் கைது - 576 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் 


தூத்துக்குடி 2021 ஜூலை 25 ;தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 22 பேர் கைது - 576 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று (24.07.2021)  தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், தெர்மல் நகர், தாளமுத்துநகர், புதுக்கோட்டை, புதியம்புத்தூர், சிப்காட், குரும்பூர், ஏரல், சாயர்புரம், கோவில்பட்டி கிழக்கு, கொப்பம்பட்டி, நாலாட்டின்புதூர், சூரங்குடி, புதூர், நாசரேத் மற்றும் மெஞ்ஞானபுரம் ஆகிய 17 காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 22 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 576 புகையிலை பாக்கெட்டுகள்  பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo