Onetamil News Logo

தூத்துக்குடியில் 2 பேரை காரில் கடத்திய 3 பேர் கைது - கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு

Onetamil News
 

தூத்துக்குடியில் 2 பேரை காரில் கடத்திய 3 பேர் கைது - கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு     


சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 பேரை காரில் கடத்திய 3 பேர் கைது - கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
      சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மடத்தூர் ரோடு திரவிய ரத்தின நகரை சேர்ந்த ராஜீவ் மகன் குமார் (48) என்பவரை கடந்த 15.06.2022 அன்று  மர்மநபர்கள் காரில் கடத்தி சென்று கடத்தப்பட்ட குமாரின் மனைவியான மெல்பா தங்கம் என்பவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர்கள் ரூபாய் 2 ½ லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு கணவரை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து மேற்படி கடத்தப்பட்ட குமாரின் மனைவியான மெல்பா தங்கம் நேற்று (17.06.2022) அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
             இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து கடத்தப்பட்டவரை மீட்குமாறு தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர்  சந்தீஸ் இ.கா.ப மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்டீபன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
         மேற்படி தனிப்படை போலீசார் கடத்தப்பட்டவரின் செல்போன் எண்ணின் மூலமாக தீவிர விசாரணை மேற்கொண்டதில், கடத்தப்பட்ட குமார் திருவண்ணாமலையில் இருப்பதாக டவர் லொகேஷன் கிடைத்தது. அதனடிப்படையில் மேற்படி தனிப்படை போலீசார் திருவண்ணாமலை சென்று விசாரணை செய்ததில், மேற்படி கடத்தப்பட்ட குமார் என்பவருடன் சேர்த்து தேனி மாவட்டம் பெரியகுளம் லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த பரசுராமன் மகன் சேகர் (61) என்பவரையும், ஆந்திரபிரதேச மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த வெங்கட் ராவ் மகன் 1) சதீஷ் (37), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் செட்டிக்குறிச்சி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் 2) மணி (33) தெலுங்கானா மாநிலம் வெங்கடகிரி பகுதியை சேர்ந்த ராம்சந்துரு மகன் 3) வெங்கடேஷ் (36) ஆகிய 3 பேர் சேர்ந்து கடத்தியதும் தெரியவந்தது.
          உடனடியாக தனிப்படை போலீசார் கடத்தப்பட்ட 2 பேர்களையும் மீட்டு அவர்களை கடத்திய எதிரிகளான சதீஷ், மணி மற்றும் வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் சிப்காட் காவல் நிலையம் கொண்டு வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி கடத்தப்பட்டவர்களான குமார் மற்றும் சேகர் ஆகிய 2 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மேற்படி எதிரிகளான சதீஷ், மணி மற்றும் வெங்கடேஷ் ஆகியோரிடம் அறிமுகமாகி தங்களிடம் விலை உயர்ந்த "டார்ச் பீச்”  எனும் வேதிப்பொருள் கலந்த மாந்தீரிக பொருள் இருப்பதாக கூறி எதிரிகளிடம் இருந்து ரூபாய் 48,000/- பணத்தை பெற்றுகொண்டு இதுவரை எந்த பொருளும் தராமல் இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக மேற்படி எதிரிகளான சதீஷ், மணி மற்றும் வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து தங்களை ஏமாற்றிய குமார் மற்றும் சேகர் ஆகிய 2 பேரையும் தாக்கி காரில் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
உடனடியாக மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகளான சதீஷ், மணி மற்றும் வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
       கடத்தப்பட்டவர்களை மீட்டு எதிரிகளை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo