Onetamil News Logo

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் டிரம்ப்பில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து 3வயது சிறுவன் பலி 

Onetamil News
 

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் டிரம்ப்பில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து 3வயது சிறுவன் பலி 


தூத்துக்குடி 2020 அக்டோபர் 16 ; தூத்துக்குடியில் பிளாஸ்டிக் டிரம்ப்பில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து 3வயது சிறுவன் பரிதாபமாக பலியானார்.   
தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் அருகே கே.சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் -பிளாண்டா தம்பதினர் மகன் ஜெஸ்லின் சாமுவேல்(3), ராஜ்குமார் – பிளாண்டா தம்பதியருக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்னர்தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இன்று வீட்டின் பின் புறத்தில் பிளாண்டா மற்றும் ராஜ்குமாரின் தாயார் இணைந்து பெண் குழந்தையை குளிப்பாட்டினராம். அப்போது வீட்டின் முன்பகுதியில் ஜெஸ்லின் சாமுவேல் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். குளிப்பாட்டிய பிறகு தலையை துடைத்துவிட துணி எடுப்பதற்காக பிளாண்டா வீட்டின் முன்பகுதிக்கு சென்றிருக்கிறார்.அப்போது அங்கு இருந்த பிளாஸ்டிக் டிரம்ப்பில் தவறி விழுந்த நிலையில் ஜெஸ்லின் சாமுவேல் கிடந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த ட்ரம்மில் ஜெஸ்லின் சாமுவேல் உடல் மிதந்து கொண்டு இருந்தது. தனியார் மருத்துவமனைக்கு உடனே கொண்டு சென்றதில், குழந்தை ஏற்கனவே இறந்துள்ளான் என கூறப்பட்டது. புதுக்கோட்டை போலீசார் குழந்தை சடலத்தை   கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo