Onetamil News Logo

ஜனாதிபதி முதல் அனைவரின் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு ;எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பு,

Onetamil News
 

ஜனாதிபதி முதல் அனைவரின் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு ;எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பு,


டெல்லி 2020 ஏப்ரல் 06 ;குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைக்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பின்னர் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.
குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், அனைத்து மாநில ஆளுநர்களும் ஒரு வருடத்திற்கு தாமாக முன்வந்து தங்களின் சம்பளத்தின் 30% குறைத்துக் கொண்டுள்ளனர், அனைவரின் சம்பளம் பிடித்தம் மூலம் கிடைக்கும் நிதி சிறப்பு நிதி தொகுப்பாக மாற்றப்படும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க இந்த நடவடிக்கை உதவும் எனவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு,அனைத்து எம்.பி-க்களின் ஓராண்டு ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு,ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும்,மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு - அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது,எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பு,எம்.பி-க்களின் தலா 10 கோடி ரூபாய் நிதி அரசு நிதியில் சேர்க்கப்படும்.அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் 30% ஊதியத்தை ஒரு வருடத்திற்கு பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜவடேகர் கூறினார்.
மேலும், அடுத்த 2 வருடங்களுக்கு எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்படும் என்றும் இதன் மூலம் கிடைக்கும் ரூ.7,900 கோடி, கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo