Onetamil News Logo

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 300 மரக்கன்றுகள் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தலைமையில் நடப்பட்டது.

Onetamil News
 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 300 மரக்கன்றுகள் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தலைமையில் நடப்பட்டது.


தூத்துக்குடி  2020 நவம்பர் 22 ; தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தருவைகுளம் செல்லும் வழியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு பகுதியில்  சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் மா, பலா, புங்கை, வேம்பு, பனை உள்ளிட்ட அளவிலான பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடுவதற்கு  திட்டமிடப்பட்டு பொதுமக்கள் மத்தியில் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள்   ஆகியோரை ஈடுபடுத்தி  மரக்கன்றுகள் வாரம்தோறும் நடப்பட்டு வருகிறது தற்போது வரை சுமார் 6000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன இதன் தொடர்ச்சியாக இன்று 22. 11 .2020 ஞாயிற்றுக்கிழமை காலை   300 மரக்கன்றுகள் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற வைக்கப்பட்டுள்ள மரங்கள் அனைத்தும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படும் ஏற்கனவே கடந்த வருடம் 2000 மரங்கள் வைக்கப்பட்டதாகவும் அவைகள் சோலையாக காட்சி அளிப்பதாகவும் இந்த மழை காலத்தில் வைக்கப்படும் இந்த மரக்கன்றுகள் அடுத்த வருடம் செழித்து வளர்ந்து சோலையாக காட்சி அளிக்கும் எனவும் தூத்துக்குடி மாநகராட்சி  அதிகாரிகள் தெரிவித்தனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo