Onetamil News Logo

அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 வழக்குகள்,உதயா எசன்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவன உரிமையாளர் உதயச்சந்திரன் அடாவடி,மாநகராட்சி ஊழியரை அடித்த தொழிலதிபர் காணொளி, 

Onetamil News
 

அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 வழக்குகள்,உதயா எசன்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவன உரிமையாளர் உதயச்சந்திரன் அடாவடி,மாநகராட்சி ஊழியரை அடித்த தொழிலதிபர் காணொளி,     


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் வடக்கு மண்டல உதவி ஆணையர் தனசிங், சுகாதார நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார அலுவலர் அரிகணேஷ் மற்றும் ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர்.                          அப்போது, அந்த கடை உரிமையாளருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் சோதனையில் ஈடுபட்ட  தீடீரென்று மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் கணேசனை கடை உரிமையாளர் முருகேசன் மகன் உதயச்சந்திரன் (40) அடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடை மற்றும் அருகில் இருந்த குடோனுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து வடபாகம் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுப்பது,கொலைமிரட்டல் விடுத்தது,அசிங்கமாக அரசு ஊழியரை பேசியது, அடித்தது, உட்பட 4 வழக்குகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo