Onetamil News Logo

இறைச்சிக்காக பதுக்கிகொண்டுசெல்லப்பட்ட  4 கடல் ஆமைகள் மீட்பு ;தூத்துக்குடி வனச்சரகர் அதிரடி   

Onetamil News
 

இறைச்சிக்காக பதுக்கிகொண்டுசெல்லப்பட்ட  4 கடல் ஆமைகள் மீட்பு ;தூத்துக்குடி வனச்சரகர் அதிரடி   


 தூத்துக்குடி 2020 மே 25 ;கடல் ஆமைகள் வேகமாக அழிந்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக கடலில் மாசு குறைந்து கடல் ஆமைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறைந்துள்ளன.கடற்கரைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் கடலில் மாசு,  பிளாஸ்டிக் மாசு போன்றவை குறைந்துள்ளது. இதனால் கடல் ஆமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 
இந்த நிலையில் நேற்று 24ம் தேதி இரவு வனச்சரக அலுவலர் ரகுவரன், தலைமையில் ரோந்துப்பணி மேற்கொள்ளும்போது வெள்ளப்பட்டி கிராமத்திற்கும் தருவைகுளம் கிராமத்திற்கும் இடையே உள்ள ஓடை நீரும் கடல் நீரும் சேருமிடத்தில் இருந்து அருகில் உள்ள தாம்போதி பாலத்தில் வல்லத்தில் இருந்து TN 69 BE 3035 என்ற டாடா எஸ் வண்டி நான்கு கடல் ஆமைகளை ஏற்றும் போது  கண்டுபிடிக்கப்பட்டது. வன உயிரின குற்றம் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இதில் குட்டியானை ஓட்டுநர் தூத்துக்குடி,இந்திரா நகர்,  சு. குமார் (45),மேலும்  ஜெகதீஸ்குமார் மற்றும் வெள்ளிங்டன்,ஆகிய 2பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் பிடிபட்ட 4 ஆமைகளையும் தருவைக்குளம் கடற்க்கரை பகுதியில் கடலில் உயிருடன் விடப்பட்டது.இதில் மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிர்கோள காப்பகத்தின் தூத்துக்குடி வனச்சரக அலுவலர் ரகுவரன் உடன் பயிற்சி வனச்சரக அலுவலர்கள், அருண்குமார் வனவர், ரெங்கநாத் வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.                                          
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo