மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பயிலும் 5 மாணவர்கள் இந்திய அறிவியல் அமைப்பு வெளியிட்ட ஊதியத்துடன் கூடிய தேசிய அளவிலான திறன் பயிற்சிக்கு தேர்வு
தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பயிலும் 5 மாணவர்கள் இந்திய அறிவியல் அமைப்பு வெளியிட்ட ஊதியத்துடன் கூடிய தேசிய அளவிலான திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் இருந்து சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சி பகுப்பாய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் இருந்து 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் ஆய்வுத் திறனை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தியன் நாலேஜ் சிஸ்டம் உதவி தொகையாக மாணவர்களுக்கு தலா ரூபாய் 25000 வீதம் மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கிய வழங்கியது.
மதர் தெரசா பொறியியல் கல்லூரியின் இந்த ஆக்கப்பூர்வமான செயல்முறைக்கு ஸ்காட் கல்வி குழுமத்தின் நிறுவனர் தலைவர் முனைவர் கிளிட்டஸ் பாபு மற்றும் கல்லூரியின் திட்டமிடல் மேம்பாடு பேராசிரியர் ஜார்ஜ் கிளிங்டன் மற்றும் ஆராய்ச்சி குழுவின் பேராசிரியர்கள், அனைத்து துறை தலைவர்கள் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.