Onetamil News Logo

விவசாயிகளின் ஏர்கலப்பை பேரணி ;இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் உள்பட 500 பேர் கைது  ;  ஆழ்வார்திருநகரியில் பரபரப்பு   

Onetamil News
 

விவசாயிகளின் ஏர்கலப்பை பேரணி ;இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் உள்பட 500 பேர் கைது  ;  ஆழ்வார்திருநகரியில் பரபரப்பு   


ஆழ்வார்திருநகரி 2020 நவம்பர் 30 ;மத்திய அரசை கண்டித்து விவசாயிகளின் ஏர்கலப்பை பேரணி – ஊர்வசி அமிர்தராஜ் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்குக் உட்பட்ட ஆழ்வார்திருநகரியில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகளின் ஏர்கலப்பை பேரணி நடந்தது. இதில் தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், மூன்று வேளாண் திருத்த சட்டங்களை கைவிடக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் விவசாயிகளை ஒன்றிணைந்து ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரியில் மாபெரும் ஏர்கலப்பை பேரணி நடத்தினர். ஏர் கலப்பை பேரணிக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை வகித்தார்.
ஆழ்வார்திருநகரி மெயின் பஜாரில் இருந்து தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் அணிவகுத்து சென்ற விவசாயிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.இதில், தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராமன், மாவட்ட விவசாய அணி தலைவர் வேல்ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் டேவிட்பிரபாகரன், ஊடகபிரிவு முத்துமணி, முன்னாள் ஓ.பி.சி.பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட பொருளாளர் மூக்காண்டி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிராஜேந்திரன், ராஜவேலு, தொழிலாளர் பிரிவு ஆடிட்டர் சிவராஜ்மோகன், பண்ணைவிளை சாமுவேல், மாவட்ட துணைத்தலைவர் கருணாகரன், ஐ.என்.டி.யூ.சி.சந்திரன், இளைஞர் காங்கிரஸ் ஜெயசீலன்துரை, வட்டாரத்தலைவர்கள் ஆழ்வார்திருநகரி கோதண்டராமன், ஸ்ரீவை மேற்கு நல்லக்கண்ணு, ஸ்ரீவை கிழக்கு தாசன், பாலசிங், சாத்தான்குளம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன், துணை ஒருங்கிணைப்பாளர் சங்கர்,தெற்கு வட்டார தலைவர் லூர்துமணி, வடக்கு வட்டார பார்த்தசாரதி, மேற்கு வட்டார சக்திவேல்முருகன், கிழக்கு வட்டார தலைவர் சுதாகர், கருங்குளம் புங்கன், திருச்செந்தூர் சற்குரு, உடன்குடி துரைராஜ் ஜோசப், ஸ்ரீவை ஊடக பிரிவு தலைவர் மரியராஜ், நகர தலைவர்கள் ஆழ்வை சதீஸ்குமார், சாயர்புரம் ஜேக்கப், ஸ்ரீவை சித்திரை, ஏரல் பாக்கர்அலி, சாத்தான்குளம் வேணுகோபால், நாசரேத் சந்திரன், உடன்குடி முத்து, வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள், காங்கிரஸ் எடிசன், சிவகளை பிச்சையா, வட்டார செயலாளர் மதிசேகரன், மகளிரணி பஞ்சவர்ணம், ராமு, முருகம்மாள், பூங்கனி, ஜிந்தா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏர் கலப்பை பேரணி நடத்திய தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசிஅமிர்தராஜ் உட்பட 500பேரை போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் கட்சியினரின் இந்த ஏர் கலப்பை பேரணியால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
சட்டங்கள் ஆங்கிலத்தில் முறையே Essential Commodities (Amendment) Act 2020, Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020, The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020 எனஅழைக்கப்படுகின்றன.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழலில்தான் விதிக்கமுடியும்: அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரிவிலையைவிட 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும். தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின்சராசரி விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப்பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது. 
விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடு இந்தச் சட்டத்தின்மூலம் இல்லாமல் போகிறது. வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம் என்பதால், ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் இருக்கிறது.
மூன்றாவது சட்டம், விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. 
இந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், பெரிய விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாயநிறுவனங்கள், மிகப் பெரிய சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஏதுவாக இந்தச்சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக அவை குற்றம்சாட்டுகின்றன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo