மாப்பிள்ளையூரணியில் 528 அடுக்கு மாடி குடியிருப்பு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி வஉசி நகர் பகுதியில் 55கோடியே 29லட்சத்து 3ஆயிரம் மதிப்பில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சண்முகையா எம்.எல்.ஏ, ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் வரவேற்புரையாற்றினார். அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு சுயமாக வீடுகட்டும் திட்டத்தின்கீழ் 20பேருக்கு ஆணைகளை கனிமொழி எம்.பி வழங்கினார்.
விழாவில் ககெலக்டர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்;சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, ஆவின்சேர்மன் சுரேஷ்குமார், கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், தெற்கு மாவட்;ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் அம்பாசங்கர், தெற்கு மாவட்;ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் மாரிச்செல்வம், ரமேஷ், மாவட்டஅவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமேரி, ஒன்றிய அமைப்பாளர் ஜெஸிந்தா, திருநெல்வேலி கோட்ட நிர்வாக பொறியாளர் சாந்தி, உதவி நிர்வாக பொறியாளர் ராஜா கொம்பையா பாண்டியன், இளநிலை பொறியாளர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் நெல்சன், தர்மலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் தொம்மை சேவியர், பாலன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், தங்கமாரிமுத்து, தங்கபாண்டி பெலிக்ஸ், சக்திவேல், ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராமசந்திரன், கணேசன், பொருளாளர் மாரியப்பன், உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.