Onetamil News Logo

துாத்துக்குடியில் ஆணுறுப்பை அறுத்து கொலை செய்த வழக்கில் துாத்துக்குடி விஜய் ரசிகர்மன்ற தலைவர் பில்லாஜெகன் உள்பட 6 கைது 

Onetamil News
 

துாத்துக்குடியில் ஆணுறுப்பை அறுத்து கொலை செய்த வழக்கில் துாத்துக்குடி விஜய் ரசிகர்மன்ற தலைவர் பில்லாஜெகன் உள்பட 6 கைது 


துாத்துக்குடி மட்டக்கடை சேர்ந்தவரும் துாத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர்மன்ற தலைவராகவும் இருப்பவர்  ஜேசு மகன் பில்லாஜெகன் (46 ). இவரது  முதல் மனைவிக்கு பிறந்த மகள் திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்லுாரியில் படித்து வருகிறார். பில்லாஜெகன் மகளை  அதே தெருவை சேர்ந்த சசின்  (26) என்பவர் ஒரு தலையாக  காதலித்ததாக பில்லா ஜெகன் புகார் கூறி உள்ளார். இந்நிலையில் சசின்னை பில்லாஜெகன் உட்பட 8 பேர் சேர்ந்து காரில் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்ததாக துாத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப் பதிவு செய்து இக்கொலையில் தொடர்புடைய 8 பேரை தேடி வந்தநிலையில் நேற்று இவ்வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை இவ்வழக்கில் தொடர்புடைய துாத்துக்குடி செயின்ட் பீட்டர் கோவில் தெருவை சேர்ந்த ஜேசு மகன் பில்லாஜெகன் (46) , அவரது தம்பி சுமன் (35), சின்னமணி நகரை பாஸ்கர் மகன் திருச்சிற்றம்பலம் (30), எஸ்எம் புரத்தை சேர்ந்த டேவிட் அந்தோணி மகன் பாலா (28), லெவிஞ்சிபுரம் முத்துச்செல்வம் மகன் வின்னர் கார்த்தி (28), மகிழ்ச்சிபுரம் சுடலைக்கண்ணு மகன் சின்னத்துரை (32) ஆகிய 6 பேரை செய்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo