ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து 6 மாதம் கடந்தும் தூத்துக்குடியில் புதிய ஸ்மார்ட்' ரேஷன் கார்டு இன்னும் வழங்கவில்லை ஏன்? மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனாமா ?
தூத்துக்குடி 2020 நவம்பர் 27: தூத்துக்குடியில் இந்த வருடம், 2020 ஜூன் மாதத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து, இதுவரை இந்த மாதம் நவம்பர் 27ம் தேதி வரை வழங்கவில்லை,ஆகையால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சென்னை தலைமைச்செயலத்திற்கு தகவல் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரேஷன் கார்டு பெற, உணவு வழங்கல் துறையின், பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 2020 ஜூன் மாதம் முதல் இன்று வரை, விண்ணப்பித்த பலருக்கு, ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள், ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை உள்ளது.ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து இதுவரை 6 மாதம் கடந்தும் தூத்துக்குடியில் புதிய ஸ்மார்ட்' ரேஷன் கார்டு இன்னும் வழங்கவில்லை ஏன்? மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனாமா ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.