Onetamil News Logo

வளர்ச்சி பெறாத ஓட்டப்பிடாரம்,சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் தாலுகா கோர்ட் கூட இல்லை இதற்க்கு யார்? காரணம் 

Onetamil News
 

வளர்ச்சி பெறாத ஓட்டப்பிடாரம், சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் தாலுகா கோர்ட் கூட இல்லை இதற்க்கு யார்? காரணம் 


ஓட்டப்பிடாரம் 2021 பிப்ரவரி 28;வளர்ச்சி பெறாத ஓட்டப்பிடாரம், சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் தாலுகா கோர்ட் கூட இல்லை இதற்க்கு யார்? காரணம் சாதிக்குள் சிக்கித்தவிக்கும் மனோபாவம் என்று அறிஞர் பெருமக்கள் கூறுகிறார்கள். ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம்-புதூர், கோவில்பட்டி, சங்கரன்கோவில், திருவேங்கடம், சாத்தூர்,சிவகாசி, ராஜாபளையம் போன்ற வானம் பார்த்த கரிசல் பூமியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்தில் கட்டுபடியாகவில்லை.
                ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பெறாததற்கு என்ன காரணம் முறையான பேருந்து நிலையம் கிடையாது.  தாலுகா கோர்ட் இதுவரை சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்துவிட்டது இன்று வரை தாலுகா கோர்ட் கொண்டுவரப்படவில்லை, விவசாயம் செழித்தோங்கிய பகுதிகளான புதியம்புத்தூர் குறுக்குச்சாலை, எப்போதும்வென்றான், மணியாச்சி இப்படி பல்வேறு இடங்களை ஆய்வு செய்து பார்த்தபோது விவசாயம் நூற்றுக்கு 20 சதவீதம் மட்டுமே இன்று நடைமுறையில் செயல்படுத்தப்படுகிறது, மற்ற நிலங்களை தரிசு நிலங்கள் ஆகவே விவசாயிகள் விவசாயம் செய்யாததற்கு என்ன காரணம் என்று விவசாய அதிகாரிகள் ஆய்வு செய்வது கிடையாது? அவர்களுக்கு சம்பளம் மட்டும் போதும்..ஓட்டப்பிடாரம்,விளாத்திகுளம் போன்ற பகுதிகள் வானம் பார்த்த பூமி எனப்து உண்மையாகும். ஆனால் தாமிரபரணி ஆறு சீவலப்பேரியில் ஓடுகிறது அதிலிருந்து ஒரு கால்வாய் அமைத்து ஓட்டப்பிடாரம் விளாத்திகுளம் வழியாக அந்த கால்வாய் கொண்டு சென்றிருந்தால் அந்த பகுதி மக்கள் விவசாயத்தில் செழித்தோங்கி இருப்பார்கள் ஆனால் இதை அரசியல் பிரமுகர்கள் செய்யவில்லை, ஒவ்வொரு தேர்தல் வருகின்ற போதெல்லாம் அந்த திட்டத்தை மட்டும் அவர்கள் சொல்லுவார்கள், ஆனால் நடைமுறை படுத்துவது கிடையாது, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகதான் ஆளும் கட்சியாக இருக்கிறது, ஆனால் மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு முதல் எந்த ஒரு அதிமுகவினரும் இந்த தொகுதியை கண்டுகொள்ளவில்லை, இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய சுய நலத்தையே பார்த்திருக்கிறார்கள், மக்கள் நலன் மீது அக்கறை கொள்வதில்லை, அவர்கள் தங்களுக்கு தேவையான இடங்களை எல்லாம் வளைத்துப் போட்டு அவர்கள் கோடீஸ்வரர்கள் பெரும் கோடீஸ்வரர் ஆக உருமாறி இருக்கிறார்கள், அதேபோல ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்-களும் அவர்களை அவர்கள் வளர்த்திருக்கிறார்கள். மக்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை, எல்லாம் சுயநலம் தான்.அனைவரும்  சிந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் ஓட்டப்பிடாரம் தொகுதி அடித்தட்டு மக்கள் வாழக்கூடிய ஒரு தொகுதி விவசாய பெருமக்கள் வாழக்கூடிய தொகுதி, இன்றைக்கு ஓட்டப்பிடாரம் காற்றாலை கம்பெனிக்கு தாரை வார்த்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும், அதிகமான தொழிற்சாலைகளின் பெருக்கமும் விவசாயத்தை அளிக்கிறது, இது கமிஷன் என்கின்ற போர்வையில் அரசியல் பிரமுகர்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது, என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

இந்த சூழலில் பெருமளவு நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் தரிசாக போட்டு விட்டனர்' அந்நிலங்களில் வேலிக்கருவை செடிகள் முளைத்து மரங்களாகி விட்டன. ஆண்டுக்காண்டு விவசாய பரப்பு குறைந்து கொண்டே வந்தன. இச்சூழலில் கடந்த 20 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் விறுவிறுப்பாக சூடு பிடித்தன, பயன்படாத தரிசு நிலங்கள் வைத்திருந்து என்ன பயன் என கருதிய விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு ஏக்கர் அளவு நிலங்களை விற்று விட்டு நகர்புறத்தில் சென்ட் அளவு இடத்தை விலைக்குவாங்கினர் .நிலைமை மோசமாவதை உணர்ந்த அரசு விவசாயிகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இதன் மூலம் ஏற்படும்இழப்பை அரசு விவசாயிகளுக்கு ஈடுகட்டுகிறது.தரிசு நிலங்களில் முளைத்திருந்த வேலி மரங்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை ஏக்கர் ரூ 5 ஆயிரம் வரை விலை போனது.வேலிக்கருவை மரங்கள் வெட்டி கரிமூட்டம் போட்டு வந்தனர்.வேலி மரங்களின் வேர் சுமார் 198 அடி ஆழம் வரை மண்ணின் ஈரப்பதத்தை உறிஞ்சி சத்தை திண்றுவிடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் அகல பாதாளத்திற்கு சென்று விட்டது.இந்நிலையில் அரசு விவசாயத்திற்கு பல வகையில் உதவி வருவதாலும், இளம் விவசாயிகள் விவசாயத்தில் ஆர்வப்படுவதாலும்   தரிசு நிலங்களில் உள்ள வேலி மரங்கள்  கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள் படிப்படியாக தோண்டி விவசாயத்தில் இறங்கி விட்டனர்.மழைமறைவு பிரதேசமாக இருந்த விளாத்திகுளம், எட்டையபுரம் பகுதிகள் கடந்த 2 ஆண்டுகளாக மழை ஓரளவு முன்பை விட பெய்து வருகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் வேலி மரமும் இராது. கரிமூட்டத்தொழிலும் இராது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo