Onetamil News Logo

தூத்துக்குடியில் 74வது சுதந்திர தினவிழா;மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தேசிய கொடியேற்றிவைத்து ரூ.2.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

Onetamil News
 

தூத்துக்குடியில் 74வது சுதந்திர தினவிழா;மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தேசிய கொடியேற்றிவைத்து ரூ.2.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 15 ; நாடு முழுவதும் இன்று 74வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தேசியக் கொடியேற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து புறாக்கள், பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வன், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாரத், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரஞ்சித்குமார், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னபூரணி, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விமலா, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்  இசக்கி ராஜா, முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் பாண்டியன், கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் நாராயணன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன், நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், தட்டார்மடம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் மணிகண்டன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் காசி, தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்  ரகு, தனிப் பிரிவு தலைமை காவலர் துரைப்பாண்டி, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் செந்தட்டி, ஆத்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் எழில் நிலவன், தூத்துக்குடி ஆயுதப்படை முதல் நிலை காவலர் ரமேஷ் குமார், எப்போதும் வென்றான் காவல்நிலைய காவலர் ராஜசேகர், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய காவலர் ரமேஷ் குமார், ஊர் காவல் படை காவலர் சரவணகுமார், ஊர் காவல் படை படைப்பிரிவு கமாண்டர் உலகம்மாள் நடமாடும் தடய அறிவியல் பிரிவு உதவி இயக்குனர்  கலா லட்சுமி, தனி விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் செல்வி. வைஜெயந்திமாலா, அமைச்சுப் பணியாளர்களின் இளநிலை உதவியாளர் பெரியசாமி ராஜா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டுச் சான்றிதழ் பெற்றனர்.
தொடர்ந்து பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 340 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் 222 பயனாளிகளுக்கு 2 கோடியே 39 லட்சத்து 81 ஆயிரத்து 248 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். 
விழாவில் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் ன், மாவட்ட கூடுதல் ஆட்சியர் , திட்ட அலுவலர் தனபதி, மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனபிரியா, முதன்மை கல்வி அலுவலர் ஞானஜோதி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, சமூகநலத்துறை அலுவலர் அமுதா, உதவி இயக்குநர் (ஊராட்சி) உமா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo