தூத்துக்குடியில் முதலமைச்சர் பொதுக்கூட்டத்திற்க்காக 8 மரங்கள் வெட்டப்பட்டது, பழைய படத்தை பாருங்கள் நீதி கேட்க நாதியில்லை,அரசியல்வாதிகள்,சமூக ஆர்வலர்கள் இருக்கிறார்களா? இல்லையா?
தூத்துக்குடி 2021 பிப்ரவரி 25 ;தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்கள்.மாலையில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுக்கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் நடந்தது.
முன்னதாக தூத்துக்குடியில் தமிழ்சாலையில் 3 கிலோ மீட்டர் தூரம் ஆக்கிரமிப்பு இருக்கிறது.ஆனால் சிதம்பர நகர் பகுதியில் ஏழை மக்கள் வாழ்ந்த பகுதி, ஈகிள் புத்தக கட்டிடம் உட்பட பல்வேறு கட்டிடங்கள் கலெக்டர் ஆசிஷ்குமார் காலத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இடித்து தள்ளப்பட்டன.
ஆனால் அந்தப்பகுதியில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம்,தனியார் இரண்டு சக்கர விற்பனை வாகன மேளா போன்றவை நடைபெற்று வருவது வழக்கம்.இந்த நிலையில் தமிழக முதல்வர் வருகைக்காக கடந்த 15ம் தேதி அந்தப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 5 தென்னை மரங்கள்,2 மாமரங்கள்,1 வேப்ப மரம் போன்ற 8 மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.
தூத்துக்குடியில் 8 மரங்கள் காணவில்லை நீதி கேட்க நாதியில்லை சமூக ஆர்வலர்கள் சிந்திப்பார்களா? மதுக்கடை, மேற்க்கத்தியா உணவு பழக்கத்தால் நோய்கள் பரவுகிறது, இதுபோன்று மக்களுக்குத் தேவையான பொதுப்பிரச்னைகளை கையில் எடுப்பது கிடையாது ஏன்?