தூத்துக்குடியில் பாக்ஸர் லெட்சுமணமூர்த்தி பயிற்சியில் 1மணி 52நிமிடத்தில் 9வயது சிறுமி 20கி.மீ தூரத்தை கடும்பனியிலும் ஓடி சாதனை
தூத்துக்குடி 2021 பிப்ரவரி 28 ; தூத்துக்குடியில் பாக்ஸர் லெட்சுமணமூர்த்தி பயிற்சியில் 1மணி 52நிமிடத்தில் 9வயது சிறுமி 20கி.மீ தூரத்தை கடும்பனியிலும் ஓடி சாதனை படைத்தார்.
தூத்துக்குடியில் இன்று காலை 5.45க்கு தூத்துக்குடி சிதம்பரநகர் தமிழன்டா கலைக்கூடத்திலிருந்து தொடங்கி விவிடி சிக்னல் திரும்பி பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஓடி புதுக்கோட்டை பழைய டோல்கேட் வரை சென்று திரும்பவும் தமிழன்டா கலைக்கூடம் வரை ஓடி 1மணி 52நிமிடத்தில் 9வயது சிறுமி 20கி.மீ தூரத்தை காற்றையும்,குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் ஓட்டமாக கடந்து NOBLE BOOK OF RECORDS புத்தகத்தில் இடம் பிடித்திட சோதனை ஓட்டம் ஓடினார்.
தூத்துக்குடி SQUARE SPORTS & BOXING CLUB Boxer M. லெட்சுமண மூர்த்தி பயிற்சியின் மூலம் முருகேசன் நகர் நாராயணன் மகள் சொர்ணா 1மணி 52நிமிடத்தில் 9வயது சிறுமி 20கி.மீ தூரத்தை காற்றையும்,குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் ஓட்டமாக கடந்து NOBLE BOOK OF RECORDS புத்தகத்தில் இடம் பிடித்திட சாதனை முயற்சியை உருவாக்கியுள்ளார். இவர்கள் வரும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர்தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி சிதம்பரநகர் தமிழன்டா கலைக்கூடத்திலிருந்து ஓடி NOBLE BOOK OF RECORDS புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளார்.
இந்த சிறுமியை தமிழன்டா கலைக்கூடத்தின் இயக்குனர் ரிப்போர்ட்டர் தமிழன்டா ஜெகஜீவன் உட்பட அப்பகுதியைச் சார்ந்த பலரும் இன்று பாராட்டினார்கள்.