சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக தூத்துக்குடியில் 5 நாள் கண்காட்சி நாளை தொடக்கம்
தூத்துக்குடியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய சார்பில் ஐந்து நாள் புகைப்படக்கண்காட்சி நாளை தொடங்குகிறது.
சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக "அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் " என்ற தலைப்பில் ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி வருகின்ற 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி கலையரங்கில் நடைபெறுகிறது. இக்கண்காட்சி 25 ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் துவங்கப்பட இருக்கின்றது.
இவ்விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் மரு.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மத்திய மக்கள் தொடர்பக மற்றும் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை மற்றும் இதர அரசு அலுவலர் பெருமக்கள் கலந்துகொள்கின்றனர்.
கண்காட்சியில் தபால்துறை, ஐ.சி.டி.எஸ்., காசநோய் தடுப்புத்துறை மற்றும் இதர அலுவலகங்கள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பங்குபெறும் மாணவர்களுக்கு வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சி 29ஆம் தேதி மாலை நிறைவு பெறுகிறது.
பொதுமக்கள் அனைவரும் இலவச வருகைதந்து கண்காட்சியை பார்வையிடலாம் என சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகத்தினர் தெரிவித்துள்ளனர்.