Onetamil News Logo

காவல்துறையினருக்கு  வழக்கு நாட்குறிப்பை திறம்பட   எழுதுவது  குறித்த  5  நாள்  புத்தாக்க  பயிற்சி  இன்று மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், துவக்கி வைத்தார்.

Onetamil News
 

காவல்துறையினருக்கு  வழக்கு நாட்குறிப்பை திறம்பட   எழுதுவது  குறித்த  5  நாள்  புத்தாக்க  பயிற்சி  இன்று மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், துவக்கி வைத்தார்.


தூத்துக்குடி 2020 செப் 28 ;தூத்துக்குடி  மாவட்டத்தில்  காவல்துறையினருக்கு  வழக்கு நாட்குறிப்பை திறம்பட   எழுதுவது  குறித்த  5  நாள்  புத்தாக்க  பயிற்சி வகுப்பை  மாவட்ட  காவல்  அலுவலக வளாக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு தங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் வழக்கு நாட்குறிப்பு எவ்வாறு திறம்பட எழுத வேண்டும் என்றும், வழக்கு நாட்குறிப்பில் எழுதப்படும் வழக்குகளின் விபரங்களின் மூலம் எதிரிக்கு தண்டனை பெறும் வகையில் எவ்வாறு வழக்கு நாட்குறிப்பை கையாள வேண்டும் என்பவை பற்றிய 5 நாள் புத்தாக்க பயிற்சி வகுப்பை தூத்துக்குடி மாட்ட காவல் அலுவலக வளாக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த புத்தாக்கப்பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு உட்பட 58 காவல் நிலையங்களிலிருந்து, காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை ஒரு காவல் நிலையத்திற்கு 6 பேர் வீதம் மொத்தம் 348 பேருக்கு 6 பிரிவுளாக தலா ஒவ்வொரு பிரிவிற்கும் 5 நாட்கள் பயிற்சிளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்,உத்தரவிட்டுள்ளார். 
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 58 காவல் நிலையங்களிலிருந்து ஒரு காவல் நிலையத்திற்கு ஒருவர் வீதம் 58 பேருக்கு  முதற்கட்ட பிரிவு பயிற்சி இன்று ஆரம்பிக்கப்பட்டது. 
இந்த புத்தாக்க பயிற்சி வகுப்பு தூத்துக்குடி மாவட்ட நில மோசடி  தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன்  தலைமையில் தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் ஆய்வாளர் ஜெரால்டுவின் மற்றும் தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா ஆகியோர் பயிற்சியளித்து வருகின்றனர்.
இந்த புத்தாக்க பயிற்சி வகுப்பில் காவல்துறையினருக்கு வழக்கு நாட்குறிப்பை சிறந்த முறையில் எவ்வாறு எழுத வேண்டும் என்பது பற்றி அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பழனிச்சாமி , சிறப்பு விரிவுரையாளராக கலந்து கொண்டு பயிற்சியளித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo