Onetamil News Logo

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி தந்தையின் மகன் 6 வயது சிறுவன் 20 கிலோ மீட்டர் தூரத்தை 2மணி நேரத்தில் கடந்து சாதனை   

Onetamil News
 

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி தந்தையின் மகன் 6 வயது சிறுவன் 20 கிலோ மீட்டர் தூரத்தை 2மணி நேரத்தில் கடந்து சாதனை     


 தூத்துக்குடி 2020 அக்டோபர் 15 ;தூத்துக்குடியில் இரு கால்கலும் நடக்க முடியாத  மாற்றுத்திறனாளி தந்தையின் மகன்கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக 6 வயது சிறுவன் 20 கிலோ மீட்டர் தூரத்தை இரண்டு மணி நேரத்தில் சோதனை ஓட்டமாக கடந்து மாற்றுத்திறனாளி மகன் சாதனை படைத்துள்ளார்.
 தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இருந்து இன்று காலை 5 மணிக்குதூத்துக்குடி மூன்றாவது மயில் பகுதியைச் சேர்ந்த மருத பெருமாள் என்பவரது மகன் சுதன் வயது ஆறு இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்
சிறுவயதிலேயே ஓட்டப்பந்தயத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்த சிறுவனை இவரது தந்தை ஓட்டப்பந்தயத்தில் பழக்கு விக்க ஆசைப்பட்டார் இதனால் நான்கு மாதங்கள் கடுமையாக பயிற்சி எடுத்து பயிற்சி எடுத்துக்கொண்ட சுதன் இன்று காலை தூத்துக்குடி  புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பிருந்து காலை 5 மணிக்கு ஓட்டப்பந்தயத்தை துவங்கி சரியாக ஏழு மணி அளவில் 7 மணிக்கு தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள மாதா கோவில் அருகே தனது  ஓட்டத்தை ஓடி முடித்தார் ஆறு வயது நிரம்பிய  இவர் ஒன்றாம் வகுப்பு முடித்து இரண்டாம் வகுப்பு தற்போது சேர்ந்துள்ளார் சரியாக 20 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்துள்ளார் இவரது தந்தையார் மருத பெருமாள் இரு கால்களும் ஊனமுற்ற  நடக்க முடியாத நிலையில் உள்ளவர் இவர் தனது மகனை  மூன்று சக்கர வாகனத்தில் தினசரி அழைத்துவந்து இந்த ஓட்டத்தில் தனது மகன் வெற்றி பெற வேண்டும் என்று நான்கு மாதங்களாக பயிற்சி அளித்துள்ளார் இவருக்கு முன்னாள் ராணுவ வீரரும் குத்துச்சண்டை வீரருமான லட்சுமண மூர்த்தி என்பவர் பயிற்சியாளராக இருந்து பயிற்சி கொடுத்துள்ளார் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு இன்று சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக  சோதனை ஓட்டமாக இந்த ஓட்டத்தை ஓடி முடித்துள்ளார் இந்த சாதனையை பார்த்த அப்பகுதியில் உள்ள பலரும் காலை நடைபயிற்சி வந்தவர்களும் சிறுவனை வாழ்த்திச் சென்றனர்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo