Onetamil News Logo

வாழத் தகுதியற்ற மாவட்டமாக தூத்துக்குடி செயல்படுகிறது ;தமிழ்நாட்டிலே கேன்சர் நோய் அதிகமுள்ள மாவட்டம் நம்ம தூத்துக்குடி

Onetamil News
 

வாழத் தகுதியற்ற மாவட்டமாக தூத்துக்குடி செயல்படுகிறது ;தமிழ்நாட்டிலே கேன்சர் நோய் அதிகமுள்ள மாவட்டம் நம்ம தூத்துக்குடி


 தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 6; ஒரு அதிர்ச்சி தகவல் - தமிழ்நாட்டிலே கேன்சர் நோய் அதிகமுள்ள மாவட்டம் தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து என்று சொன்னால் கடல்வழி, தரைவழி, ஆகாய வழி, மற்றும் இருப்பாதையும் அமைந்துள்ளது.  இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்,1000 மேற்பட்ட ஷிப்பிங் நிறுவனங்கள், சிறியதும் பெரியதுமாக இருக்கிறது.2ம் தொழில் செய்து ஒரே வருடத்தில் புதிய முதலாளிகள் பல போர்வைகளை போர்த்திக்கொண்டு உருவாகி வருகின்றனர். வருமானவரித்துறை கண்டுகொள்வதுகிடையாது,இங்கு வாழும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை இங்கு மாநகராட்சி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்ட நோக்கமே தொழிற்சாலைகள் அதிகமாய் இருக்கிறது என்று காரணம் காட்டி வாங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டமானது வாழத் தகுதியற்ற மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.  இங்கு கேன்சர் நோய் முதல் கிட்னி நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா, எய்ட்ஸ் என்று அனைத்து நோய்களும் எளிதாக ஒட்டுகிறது.  காரணம் தாய்மையின்மை என்பதே உண்மையாகும்.  மாவட்ட நிர்வாகம் கையை கட்டி வைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்தால் அதிகாரிகள் மாற்றம் தான் நடக்கும். தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் 40,000 க்கும் மேற்பட்ட கேன்சர் நோயாளிகள், 60,000 க்கும் மேற்பட்ட (முடிவைத்தானேந்தல், ஓட்டபிடாரம், மீனாட்சிப்பட்டி, தெய்வச்செயல்புரம்) கிட்னி நோயாளிகள் அதிகம் வசிக்கின்றனர்.  ஆஸ்துமா, அலர்ஜி, நுரையீரல் பிரச்சனை கொண்ட நோயாளிகள் 5 இலட்சம் பேர் வாழ்கின்றனர்.   சென்னைக்கு நோயாளிகள் படையெடுக்கின்றனர். தூத்துக்குடியில் கேன்சர் நோயாளிகள் சென்னைக்கு படையெடுக்கின்றனர்.  காரணம் ரேடியோ தெரபி (கரண்ட் வைக்க) க்காக செல்கின்றனர்.   தூத்துக்குடியில் பயிற்சி மருத்துவர்கள் நோயாளிகளை படாதபாடுபடுத்துகின்றனர்.  அதனால் நோயாளிகள் பயந்து போய் ஓடுகின்றனர்.  அதைப்போல தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வரவும் பயப்படுகின்றனர்.  இதுதான் வேதனையான விசயம் என்று தணியும்.அனைத்து நோய்களுக்கும் உணவு தான் மூல காரணம்,ஆனால் யாரும் கண்டுகொள்வதில்லை                           
உணவுமுறையால் நோய்கள் உருவாகக் காரணம் ;   கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக விளைந்த சத்துள்ள உணவு வகைகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நம்மில் பலர் செயற்கை உணவு வகைகளுக்கு பரோட்டா,பிரியாணி,பிரைடு ரைஸ்,இப்படி....பல வகைகளிலும் உணவு மாறியதாலும் சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதாலும், இன்று புதிது புதிதாக பல நோய்கள் உருவாகி வருகின்றன.
முறையற்ற உணவு பழக்க வழக்கத்தால் சுமார் 10 பேரில் 8 பேருக்கு சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்கள் ;
விவசாய நிலத்தில் சிறு, குறு தானியங்கள் சாகுபடி செய்து அவற்றை அறுவடை காலத்தில் அறுவடை செய்து அவற்றை உணவாக்கி பயன்படுத்துவதை பலரும் மறந்து விட்டோம்.இதனால் தான் பாரம்பரியமான இயற்கை உணவுகள் இன்று காட்சி பொருட்களாக மாறி வருகிறது. தற்போது நம்மிடையே உள்ள முறையற்ற உணவு பழக்க வழக்கத்தால் சுமார் 10 பேரில் 8 பேருக்கு சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
காரணம் அரிசி உற்பத்திக்காக பல விதமான பூச்சி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். எனவே இனியாவது பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றினால் நோய்கள் இன்றி வாழலாம். இரும்பு சத்துள்ள உணவுகளான காய்கறி, கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி சுகாதாரமில்லாத உணவு முறைகளின் மூலம் பல தொற்று நோய்களும் ஏற்படுகின்றன. சுத்தம், சமைத்த மற்றும் சமைக்காத உணவை தனித்தனியே வைத்தல், உணவைப் பாதுகாப்பான தட்பவெப்பத்தில் பராமரித்தல், கழுவுதல் மற்றும் மூடி வைப்பதன் மூலமாக பாதுகாப்பான தண்ணீர் மற்றும் உணவைப் பயன்படுத்தி, உணவு மற்றும் தண்ணீரினால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம்.
பாக்டீரியாக்கள் இருக்கும் உணவுப் பொருளை உண்பதால் உணவின் மூலமாகத் தொற்று நோய் ஏற்படுகிறது. அதை சாப்பிட்ட பின்னர் உடலுக்குள் சென்றுத் தொற்றை ஏற்படுத்துகிறது.முறையற்ற உணவுத் தயாரிப்பு முறைகள், பாதுகாப்பு முறைகள் மற்றும் வீட்டில் சுத்தம் பேணப்படாமல் இருத்தல் அகிய காரணங்களால் உணவின் மூலம் நோய்கள் பரவுகிறது.குடிக்கும் நீர் நிலைகளில் பாதிப்படைவதாலும், மிருக மற்றும் மனிதக் கழிவுகள் குடிதண்ணீர் நிலைகளில் கலப்பதாலும் தண்ணீர் மூலம் டைபாய்டு, மஞ்சள் காமாலை, காலரா நோய்கள் ஏற்படுகின்றன.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo