Onetamil News Logo

தூத்துக்குடி கல்லூரி முன்னாள் முதல்வர் உட்பட அவரது குடும்பத்தினர் 3பேர் மீது பெண் டாக்டரை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் வழக்குப் பதிவு ;பரபரப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி கல்லூரி முன்னாள் முதல்வர் உட்பட அவரது குடும்பத்தினர் 3பேர் மீது பெண் டாக்டரை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் வழக்குப் பதிவு ;பரபரப்பு 


தூத்துக்குடி 2020 செப் 16 ;தூத்துக்குடி தனியார் வங்கியில் வேலை பார்ப்பதாக கூறி, பெண் டாக்டரை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த கல்லூரி முன்னாள் முதல்வர் உட்பட அவரது குடும்பத்தினர் 3பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள கல்லூரியில் ஓய்வுபெற்ற முன்னாள் முதல்வரும் பேராசிரியருமான  மோகன்ராஜ் இவர்  மேலசண்முகபுரத்தில் வசிக்கிறார்.இவரது மகன் விஷ்னு வரதராஜ் (31), இவருக்கும் சென்னை  நுங்கம்பாக்கம் அனுமன் காலனியைச் சேர்ந்த டாக்டர்.தேவிகலா (27) என்பவருக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 65 பவுன் நகையும் ரூ.5.5 இலட்சம் ரொக்கமும் பெண் வீட்டார் சார்பில் வரதட்சனையாக பேசப்பட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி ஐசிஐசிஐ வங்கியில் விஷ்னு வரதராஜ் பணிசெய்வதாகக் கூறி திருமணம் பேசப்பட்டது. அதன்பிறகு திருமணத்திற்கு பின்னர் டாக்டர்.தேவிகலா தூத்துக்குடியில் உள்ள ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்துள்ளார். நாட்கள்,வருடங்கள் கடந்தன. 2018-ம் ஆண்டு விஷ்னு வரதராஜ் வங்கியில் வேலைபார்க்கவில்லை என்ற விபரம் டாக்டர்.தேவிகலா -வுக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து அவரது குடும்பத்தில் பல்வேறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுகளாக தம்பதினருக்கு குழந்தை இல்லை என்று கூறி டாக்டர்.தேவிகலாவை முன்னாள் முதல்வரும் பேராசிரியருமான  மோகன்ராஜ் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் டாக்டர்  தேவி கலா அவரது கணவரை விட்டு பிரிந்தார். மேலும் திருமணத்தின் போது கொடுத்த 65 பவுன் நகையும் ரூ.5.5இலட்சம் ரொக்கமும் வரதட்சனையை திருப்பி கேட்டதால் முன்னாள் முதல்வரும் பேராசிரியருமான  மோகன்ராஜ் குடும்பத்தினர் டாக்டர் -க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
                இது குறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டாக்டர் .தேவிகலா ,முன்னாள் கல்லூரி முதல்வரும் பேராசிரியருமான  மோகன்ராஜ் குடும்பத்தினர் மீது புகார் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் முன்னாள் கல்லூரி முதல்வரும் பேராசிரியருமான  மோகன்ராஜ் ,அவரது மகன் விஷ்னு வரதராஜ், அவரது மனைவி கதிர்காம கனி ஆகிய 3பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo