Onetamil News Logo

ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டுடன்பட்டி பொது மக்கள் நல அறக்கட்டளை சார்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா   

Onetamil News
 

ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டுடன்பட்டி பொது மக்கள் நல அறக்கட்டளை சார்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா   


தூத்துக்குடி 2021 அக்டோபர் 20; ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி ஒட்டுடன்பட்டி  கிராமத்தில் ஒட்டுடன்பட்டி பொது மக்கள் நல அறக்கட்டளை சார்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு எம் சி சண்முகையா எம்எல்ஏ அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு பொதுமக்களிடம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல் ரமேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிகளில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் முத்து, புளியம்பட்டி காவல் ஆய்வாளர் தர்மர், நல அறக்கட்டளை தலைவர் சுந்தர் ராஜன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் ஹரி ராமகிருஷ்ணன், அக்கா நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை, ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி, ஓட்டுடன் பட்டி கிளைச் செயலாளர் இளங்கோ, கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், ஊர் நாட்டாமைகள் சிவலிங்கம், நடராஜன், தங்கதுரை, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் அன்னம்மாள்,  ரமேஷ், மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo