Onetamil News Logo

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம், சிலுவைபட்டி உட்பட 100 மீன் வியாபாரிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

Onetamil News
 

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம், சிலுவைபட்டி உட்பட 100 மீன் வியாபாரிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா


தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் 100 மீன் வியாபாரிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் கல்வி, மருத்துவம், குடிநீர், சுயதொழில், மகளிர் மேம்பாடு போன்ற பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்லரை மீன் வியாபாரம் செய்யும் மீனவர்களுக்காக நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சர்வேசன் தலைமை தாங்கினார். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன முதன்மை இயக்க அதிகாரி அ.சுமதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம், சிலுவைபட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 90 மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இருசக்கர வாகனத்தில் சென்று மீன் வியாபாரம் செய்யும் 10 பேருக்கு மீன் வைக்கும் பிளாஸ்டிக் பெட்டிகளும், தலையில் சுமந்து நடந்து சென்று மீன் வியாபாரம் செய்யும் 90 பெண்களுக்கு அலுமினிய வட்டா, வாளி மற்றும் அவர்களுக்கு மேல் அங்கிகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சமுதாய வளர்ச்சிப் பிரிவு மேலாளர் சுந்தர்ராஜன், நீதித்துறை மேலாளர் பிரதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo