மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு சொந்தமான பூங்காவில் நள்ளிரவில் தீ விபத்து ;ஊராட்சி தலைவர் ஆர் சரவணக்குமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினார்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி அருகே நள்ளிரவில் ஊராட்சி பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குச் சொந்தமான நட்டாத்தி அம்மன் கோவில் அருகே ஊராட்சி பூங்கா உள்ளது. இங்கு நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஊராட்சி பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து தகவலறிந்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைக்கும் வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவில் 12 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள். இந்த தீ விபத்தில் ரூ.50ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நள்ளிரவில் ஊராட்சித் தலைவர் ஆர்.சரவணக்குமார் ,தனிப்பிரிவு காவலர் முருகேசன்,வார்டு உறுப்பினர் காமராஜ்,திமுக முன்னணி நிர்வாகி ராஜேந்திரன் உட்பட பலர் தீயணைக்க உதவி செய்தனர்.