கதிர்வேல் நகர் குடியிருப்புப்பகுதிகளில் ராட்சத காங்கீரிட் கலவை மெஷின் அதிக சத்தத்துடன் தூசி பரவுகிறது;கண்டுகொள்வார் யாருமில்லை? வழக்கறிஞர் ரமேஷ்பாண்டியன் கேள்வி?
கதிர்வேல் நகர் குடியிருப்புப்பகுதிகளில் அதிக சத்தத்துடன் தூசி ஏற்படுகிறது ;கண்டுகொள்வார் யாருமில்லை? வழக்கறிஞர் ரமேஷ்பாண்டியன் கேள்வி? எழுப்பியுள்ளார். இதுகுறித்து அந்தப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொழுது தூத்துக்குடி கதிர்வேல் நகர் பிரதான சாலையில் சிஎஸ்ஐ தேவாலயம் இருக்கின்றது. இதன் அருகில் பட்டா நிலங்கள் இருக்கிறது. அந்த நிலங்களில் பிஎஸ்ஆர் ஒப்பந்தக்காரர்கள் மடத்தூர் பகுதியில் முருகேசன் நகர் பகுதியில் ஒரு பாலம் கட்டிவருகின்றனர். அந்தப் பாலத்திற்கு பொருள்களை எல்லாம் இந்த பகுதியில் கலவை போட்டு கொண்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் அதிக ஒலி இரைச்சல், ஒரு புறம் மறுபுறம் காற்று மாசுபாடு ஏற்பட்டு அருகில் உள்ள அத்தனை குடியிருப்பு வீடுகளிலும் இந்த தூசிகள் உள்ளே சென்று நுரையீரல் தொற்று நோய் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இது, குறித்து அந்த ஒப்பந்தகாரர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் பதில் சொல்ல மறுக்கிறார்கள். புகைப்படம் எடுப்பவர்களையே, அவர்கள் வீடியோ எடுக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு யார்? இவ்வளவு தைரியம் கொடுத்தார்கள் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. இவர்கள் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி உறவினர்கள் என்று கூறுகிறார்கள்.
அதிக இரைச்சல் ஒலியானது காது கேளாமையை உருவாக்குகிறது.காற்று மாசுபாடு ஏற்படுகிறது அவற்றை குறைக்க வேண்டும், அதிகமான சத்தம் உடலுக்கு ஆகாது என்பதால் சத்தத்தை குறைக்க வேண்டும், என்று மத்திய மாநில அரசுகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. ஆனால் அவற்றையெல்லாம் பொதுமக்கள், அரசு பணியாளர்கள் அரசியல்வாதிகள் யாரும் காதில் வாங்குவது கிடையாது. இதனால் பல்வேறு நோய்கள் தான் உருவாகுகிறது என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.