Onetamil News Logo

எப்போதுவென்றான் அருகே நின்ற லாரி மீது மோதிய லோடு வேன்  ;2 பேர் பலி 

Onetamil News
 

எப்போதுவென்றான் அருகே நின்ற லாரி மீது மோதிய லோடு வேன்  ;2 பேர் பலி 


தூத்துக்குடி, 2020 அக்டோபர் 22; தூத்துக்குடி மாவட்டம் மதுரையில் இருந்து  காய்கறி ஏற்றிட சென்று விட்டு மதுரையில் இருந்து சாத்தான்குளத்துக்கு எப்போதும்வென்றான் வழியே தூத்துக்குடிக்கு வந்துகொண்டிருந்த  சரக்கு  வேன்  , எப்போதும்வென்றான் புறவழிச்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது லோடு மினிலாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால்  சரக்கு வேன் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே இருந்த 2 பேர் மேல் பாய்ந்தது.  அதில் மினி லாரி உரிமையாளர் சேரகுளம் ,லிங்கராஜ் மகன் ராஜ்குமார் (23) ,சாத்தான்குளம் செட்டிகுளம் ஜெயபால் மகன் ஏசுதாசன் (19),ஆகிய  இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.  இதுகுறித்து தகவலறிந்த எப்போதும்வென்றான் எஸ்.ஐ முத்துமாலை மற்றும் போலீசார் ,தீயணைப்பு அலுவலர்கள் போன்றோர் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுக்குள் சிக்கி இறந்த இருவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo