Onetamil News Logo

பத்திரிகை நிருபராக இருப்பதாக கூறி தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூபாய் 26 லட்சம் பணம் மோசடி செய்தவர் கைது 

Onetamil News
 

பத்திரிகை நிருபராக இருப்பதாக கூறி தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூபாய் 26 லட்சம் பணம் மோசடி செய்தவர் கைது   


தூத்துக்குடி 2021 நவம்பர் 23 ;தூத்துக்குடி மாவட்டம் பல்வேறு திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டவர், தான் சென்னையில் பத்திரிகை நிருபராக இருப்பதாக கூறி தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூபாய் 26 லட்சம் பணம் மோசடி செய்தவர் கைது - மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி முனியசாமிபுரம் சுடலை காலனி பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரி சசிகுமார் (35) என்பவர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ்குமார் (36) என்பவர், தான் சென்னையில் நிருபராக  இருப்பதாகவும், அங்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் இருப்பதாகவும், தன்னால் அரசு வேலை வாங்கி கொடுக்க முடியும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.  இதனை நம்பி மாரி சசிகுமார் தனக்கும், தனது மனைவி மற்றும் சகோதரிக்கும் அரசு வேலை வாங்கி தர ரூபாய் 10,00,000/-மும், அதே போல் மாரி சசிகுமாரின் உறவினர்களான முத்துராஜ் என்பவரிடம் ரூபாய் 3,25,000/-மும், முத்துச்சாமி என்பவரிடம் ரூபாய் 3,00,000/-மும், திருஞானம் என்பவரிடம் ரூபாய் 3,10,000/-மும், துரை முருகன் என்பவரிடம் ரூபாய் 3,25,000/-மும், அமுதமலர் என்பவரிடம் ரூபாய் 3,00,000/-மும் ஆக மொத்தம் ரூபாய் 25,60,000/- பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து மாரி சசிகுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தார்.
மேற்படி புகார் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் அவர்களை உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அவரது மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் வனிதா ராணி தலைமையில் உதவி ஆய்வாளர் ஊர்க்காவல் பெருமாள், உதவி ஆய்வாளர்கள்  சண்முகசுந்தரம்,  பிள்ளைமுத்து, தலைமைக் காவலர்கள் கோபால் மற்றும் பிள்ளைமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படையினர்  தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரமேஷ்குமார் நிருபர் என்று கூறி மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து, சிவகாசி திருத்தங்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே தனிப்படையினர் ரமேஷ்குமாரை இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரமேஷ்குமார் என்பவர் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கிலும், 2 திருட்டு வழக்குகளிலும், சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளிலும் மொத்தம் 6 வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  இவரைக் கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், பாராட்டினார்.
வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் தாங்கள் படித்த படிப்பின் மீதும், தங்கள் திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து போட்டித்தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று அரசு வேலை வாங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது போன்று அரசு வேலை வாங்குவதற்கு பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்,தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo