Onetamil News Logo

தூத்துக்குடி பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு ;தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் தகவல் 

Onetamil News
 

தூத்துக்குடி பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு ;தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் தகவல் 


தூத்துக்குடி 2020 அக்டோபர் 24 ; தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தூத்துக்குடி பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ; தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சி திறந்தவெளி மலம் கழித்தலற்ற நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அடுத்தநிலையான ODF+ சான்றிற்கு விண்ணப்பிக்க ஏதுவாக அனைத்து பொது மற்றும் சமுதாய கழிப்பறைகள் புனரமைக்கப்பட்டு காற்றோட்டம், தண்ணீர் வசதி, மின்வசதி, நாப்கின் எரிப்பான், கண்ணாடி, தானியங்கி கை உலர்ப்பான், போன்ற பல்வேறு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மேற்படி வசதிகளை நல்ல முறையில் பயன்படுத்துவதோடு மேற்படி பொருள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் இவ்வறிவிப்பு வெளியான 15-தினங்களுக்குள் எழுத்து மூலமாக ஆணையர் (ம) தனி அலுவலர் அவர்களுக்கு தெரிவிக்குமாறு இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo