Onetamil News Logo

பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது -  ரூபாய் 1675/- மதிப்புள்ள 930 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்   

Onetamil News
 

பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது -  ரூபாய் 1675/- மதிப்புள்ள 930 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்       


தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது -  ரூபாய் 1675/- மதிப்புள்ள 930 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது 
   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  எல். பாலாஜி சரவணன் , உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் ஹென்சன் பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று (21.11.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி தளவாய்புரம் பகுதியில் உள்ள அதே பகுதியை சேர்ந்த இலங்கை ராஜன் மகன் இளையராஜா (38) என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை செய்ததில், அதில் மேற்படி இளையராஜா தடை செய்யப்பட்ட புகையிலை 
  பொருட்களை சட்ட விரோத விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
     உடனே மேற்படி போலீசார் இளையராஜாவை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 1675/-  மதிப்புள்ள 930 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo