Onetamil News Logo

விவசாய நிலங்களை அழிக்கும் தனியார் மருத்துவமனை! வேடிக்கை பார்க்கும் திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழுமம்!! சமூக ஆர்வலர் பளார்!!

Onetamil News
 

விவசாய நிலங்களை அழிக்கும் தனியார் மருத்துவமனை!

வேடிக்கை பார்க்கும் திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழுமம்!!

சமூக ஆர்வலர் பளார்!!


திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்தை சார்ந்த அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை ஏற்கனவே பல கட்ட விமர்சனங்களுக்கு பெயர் போனது என்பது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியும் நன்று அறிந்த விஷயமே.
ஏற்கனவே சமூக ஆர்வலர் டாக்டர்.ச.பெர்டின் ராயன் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வணக்கத்திற்குரிய திரு.சரவணன் அவர்களிடம் மக்கள் குறை தீர்ப்பு நாளில் அளித்த புகார் மனு என அனைத்திலும் உள்ளூர் திட்ட குழுமத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை நிர்வாகம் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களை அழித்து வாகன வசதி மற்றும் FSI SET BACK அமைய வழிவகுத்து வருவதை மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என சாடியள்ளார்.
மேலும் வாய்க்கால் கரையோரம் ஆக்கிரமிப்பு செய்து விரிவடைந்த சாலை போல் காட்சியளிக்க மணல் திட்டுகளை உருவாக்கி 20 அடி சாலை போல காட்சியை உருவாக்கியுள்ளனர் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை நிர்வாகத்தினர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் தற்போது பிரச்சனையில் சிக்கி இருக்கும் 14 மருத்துவமனைகளை சுற்றி தீயணைப்பு வாகனம் வராது என்ற நிலையை தாண்டி அதில் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை இருக்கும் சாலைக்கு உள்ளேயே தீயணைப்பு வாகனம் நுழையாது என்பது உண்மையிலும் உண்மை.
மருத்துவமனை முன் புற சாலையின் உண்மையான அகலம் வெறும் 8 அடி மட்டுமே.
ஏற்கனவே அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனைக்கு தீயணைப்பு தடையின்மை சான்றிதழ் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து சுகாதார துறை சான்றிதழும் மறுக்கப்பட்டது பின்குறிப்பு.
திட்ட அனுமதி மற்றும் மறுசீராய்வு திட்ட அனுமதி வழங்குவதற்கு உள்ளூர் திட்ட குழும விதிகளின் படி சாலையின் அகலமானது மிகப்பெரிய பங்கு வகிக்கும் நிலையில் அந்த சாலையையே போலியான வடிவமைப்பில் உருவாக்கியுள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
FSI SETBACK உருவாக்கிட மருத்துவமனை சுற்றிலும் உள்ள வயல்களை அழித்து கழிவு மணலை தட்டி நாளைய தலைமுறையினர் உணவுக்கே திண்டாடும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர் மருத்துவமனை நிர்வாகம்.
ஏற்கனவே முற்றிலுமாக விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மருத்துவமனை கட்டப்பட்ட நிலையில் அதனை அடுத்து விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வாகன நிறுத்துமிடம் FSI SET BACK என மருத்துவமனையின் அட்டகாசம் தொடர மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும்,உள்ளூர் திட்ட குழும அதிகாரிகளின் துணையோடும் அராஜகம் செய்து வருகிறது அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை நிர்வாகம் என தனது பேட்டியில் திருநெல்வேலி மாநகராட்சியையும், உள்ளூர் திட்ட குழுமத்தையும் சாடி உள்ளார் சமூக ஆர்வலர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo